தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ ட்ரோன் கொள்கை வகுக்க மூன்று உறுப்பினர்கள் நியமனம்

 ட்ரோன் கொள்கை வகுக்க மூன்று உறுப்பினர்கள் நியமனம்

 ட்ரோன் கொள்கை வகுக்க மூன்று உறுப்பினர்கள் நியமனம்


ADDED : பிப் 20, 2026 01:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2026 01:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: டில்லி மாநிலத்தில், ட்ரோன் எனும் ஆளில்லா விமானங்கள் கொள்கைகளை வகுக்க, மூன்று உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம், டில்லி அருகே உள்ள செங்கோட்டையில், ட்ரோன் வாயிலாக வெடிகுண்டு வெடிக்கப்பட்டது. அதையடுத்து, கவர்னர் வி.கே.சக்சேனா உத்தரவின் படி, ட்ரோன் கொள்கைகளை வகுக்க, மூன்று உறுப்பினர்களை கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறையின் செயலர், டில்லி போலீஸ் உயரதிகாரி மற்றும் மாநில உள்துறையின் செயலர் ஆகிய மூன்று பேர், இந்த கமிட்டிக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள், உத்தராகண்ட், ஹிமாச்சல பிரதேசம், குஜராத், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பின்பற்றப்படும் ட்ரோன் கொள்கைகளை, டில்லியிலும் பின்பற்ற தகுந்த ஆலோசனைகளை வழங்குவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us