ராமர் கோவில் அறக்கட்டளைக்கு மூன்று உறுப்பினர்கள் நியமனம்
ராமர் கோவில் அறக்கட்டளைக்கு மூன்று உறுப்பினர்கள் நியமனம்
ADDED : செப் 02, 2026 04:27 PM

அயோத்தி : அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளைக்கு புதிதாக மூன்று உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்களின் காணிக்கைகளில் முறைகேடு என எழுந்த புகார்களை தொடர்ந்து, 3 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.அதில் உண்டியல் காணிக்கை எண்ணும் மையத்தில் இருந்த தற்காலிக ஊழியர்கள், முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.அதே நேரத்தில் இனி முறைகேடுகள் நடக்காமல் இருக்க, புதிய தலைமை செயல் அதிகாரியை நியமிக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. அதற்கான நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டன.
இந்நிலையில், ராமர் கோவில் அறக்கட்டளைக்கு புதிதாக மூன்று உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அயோத்தியை சேர்ந்த மதன் மோகன் பாண்டே, டில்லியை சேர்ந்த மகேஷ் பக்சந்தா மற்றும் உபியின் ஷிகோஹாபாத்தை சேர்ந்த நிர்மல் யாதவ் ஆகியோர் அறக்கட்டளை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் யார் தலைமை ஏற்பார்கள் என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.
