ADDED : ஜூலை 19, 2025 02:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: கேரளாவில், 8 வயது மகளை மூன்று ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கேரளாவின் இடுக்கி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 35 வயதுடைய நபர், தன் 5 வயது மகள் ஒன்றாம் வகுப்பு படித்தது முதல், தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.
கடந்த 2020ல் சிறுமிக்கு 8 வயது ஆன போது தந்தையின் கொடூர செயல் வெளியில் தெரியவந்தது.
இடுக்கி போலீசில் தாயார் புகார் அளித்தார். போலீசார் தந்தையை 'போக்சோ' வில் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை இடுக்கி பைனாவ் அதிவிரைவு போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. கொடூர தந்தைக்கு மூன்று ஆயுள் தண்டனையும், 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

