ரயில் பயணியை தாக்கிய டி.டி.இ.ஆர்.,: வீடியோ வைரலானதால் ‛சஸ்பெண்ட்'
ரயில் பயணியை தாக்கிய டி.டி.இ.ஆர்.,: வீடியோ வைரலானதால் ‛சஸ்பெண்ட்'
UPDATED : ஜன 18, 2024 08:50 PM
ADDED : ஜன 18, 2024 08:42 PM

லக்னோ: உ.பியில் டிக்கெட் எடுக்காமல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணியை டிக்கெட் பரிசேதாகர் தாக்கிய வீடியோ வைரலானதையடுத்து அவர் ‛சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
உ.பி. மாநிலத்தில் கிழக்கு மத்திய ரயில் மண்டலத்தில் பாராவுனி -லக்னோ இடையே எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சம்பவத்தன்று ஓடும் ரயிலில் வழக்கமாக (டி.டி.இ.ஆர் ) பயணிகளிடம் டிக்கெட் பரிசோதகர் பரிசோதனை நடத்தினார். அப்போது ஒருவர் டிக்கெட் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த டிக்கெட் பரிசோதகர் ஏன் டிக்கெட் எடுக்காமல் ரயிலில் ஏறினாய் என கேட்டு கன்னத்தில் திரும்ப திரும்ப தாக்கினார். இதனை சக பயணி ஒருவர் மொபைலில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதவிவேற்றினார்.
வீடியோ வைரலானதையடுத்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விசாரணை நடத்த உத்தரவிட்டு, டிக்கெட் பரிசோதகரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.