பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் இன்று முதல் வாட்ஸாபில் டிக்கெட்
பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் இன்று முதல் வாட்ஸாபில் டிக்கெட்
ADDED : மார் 02, 2024 10:32 PM

பெங்களூரு: உலக வன விலங்கு தினத்தை ஒட்டி, இன்று முதல் 'வாட்ஸாப்' மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறையை பன்னரகட்டா உயிரியல் பூங்கா அமல்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக பன்னரகட்டா உயிரியல் பூங்கா வெளியிட்டு உள்ள அறிக்கை:
உலக வனவிலங்கு தினத்தை ஒட்டி, இன்று முதல் பன்னர கட்டா மிருகக்காட்சி சாலைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டம் அமல்படுத்தி உள்ளோம்.
மிருகக்காட்சி சாலை, சபாரி, பட்டாம்பூச்சி பூங்காவுக்கு செல்ல திட்டமிடும் பார்வையாளர்கள் 'வாட்ஸாப்' மூலம் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
டிக்கெட்டுகள் பார்வையாளர்களின் வாட்ஸாப்புக்கும், மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பப்படும். இவை பூங்கா நுழைவு வாயிலில் 'ஸ்கேன்' செய்து சரிபார்க்கப்படும்.
காகிதமில்லா முன்பதிவால், யு.பி.ஐ., மூலம் கட்டணம் செலுத்தலாம். 90350 92794 என்ற வாட்ஸாப் எண்ணுக்கு 'ஹாய்' என்று அனுப்பி, டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்.
இந்த வாய்ப்பை பார்வையாளர்கள் பயன்படுத்தி, பசுமையான சூழலை ஆதரிக்க கைகோர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

