திலக் வர்மா அதிரடி ஆட்டம்; டில்லிக்கு 206 ரன்கள் இலக்காக நிர்ணயம்
திலக் வர்மா அதிரடி ஆட்டம்; டில்லிக்கு 206 ரன்கள் இலக்காக நிர்ணயம்
ADDED : ஏப் 13, 2025 09:23 PM

புதுடில்லி: டில்லி அணிக்கு எதிரான பிரீமியர் லீக் போட்டியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்களை குவித்துள்ளது.
டில்லியில் நடக்கும் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 29வது லீக் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் டில்லி அணியும், 9வது இடத்தில் இருக்கும் முன்னாள் சாம்பியன் மும்பை அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டில்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய மும்பை அணிக்கு, ரோகித் ஷர்மா (18), ரிக்கெல்டன் (41) சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். பவர் பிளேவில் 59 ரன்களை குவித்தனர்.
சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். சூர்யா குமார் 40 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா (2) வந்த வேகத்தில் நடையைக் கட்டினார். அதிரடியாக ஆடிய திலக் வர்மா 26 பந்தில் அரைசதம் அடித்தார்.
அதன்பிறகு திலக் வர்மா, நமன் தீர் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் சேர்த்தது. திலக் வர்மா 59 ரன்கள் குவித்தார். நமன் தீர் 38 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

