தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/இந்தியா/வயதான ஏழை தச்சு தொழிலாளியிடம் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை கொடுத்து மோசடி

வயதான ஏழை தச்சு தொழிலாளியிடம் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை கொடுத்து மோசடி

வயதான ஏழை தச்சு தொழிலாளியிடம் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை கொடுத்து மோசடி


UPDATED : ஜூலை 25, 2024 03:50 PM

ADDED : ஜூலை 25, 2024 03:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 25, 2024 03:50 PM ADDED : ஜூலை 25, 2024 03:37 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவனந்தபுரம்: வயதான தச்சு தொழிலாளியிடம் ரூ. 2 ஆயிரம் நோட்டை கொடுத்து ஏமாற்றி மோசடி நடந்துள்ளது.

கேரள மாநிலம் திரிசூர் அருகே செல்லக்கரையில் உள்ள நாட்டியன்சிரா பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் ஏழுதச்சன் 84. இவர் சிறிய அளவிலான தச்சு வேலை செய்து வந்தார். இவரிடம் வந்த ஒரு மர வியாபாரி ஒரு குறிப்பிட்ட மரங்களை வெட்டி தருமாறு ஒரு வேலையை கொடுத்தார். முதலில் 5 ஆயிரம் அட்வான்சாக வழங்கினார். மரங்கள் வாங்க வரும்போது மீதி தொகை 20 ஆயிரத்தை இரண்டாயிரம் ரூபாய் தாளாக கவரில் போட்டு வழங்கியுள்ளார். இவரும் நம்பிக்கையோடு வாங்கி வைத்துள்ளார்.

பண தேவைக்கு எடுத்து பார்க்கும் போது 2 ஆயிரம் ரூபாயாக இருந்தது கண்டு அதிர்ச்சியுற்றார். இதனை அவர் மாற்ற பல இடங்களுக்கு சென்று முயற்சித்தும் முடியாமல் பெரும் சிரமத்திற்குள்ளானார்.

போஸ்ட் ஆபீஸ் ஊழியர்கள் கருணை


2 ஆயிரம் ரூபாய் செல்லாது என கடந்த 2023 மே மாதத்தில் அறிவிக்கப்பட்டது. இதனை மாற்ற அவகாசம் வழங்கி இது முடிந்து விட்டதால் 2 ஆயிரத்தை போஸ்ட் ஆபீசில் மட்டுமே கொடுக்க முடியும். இது ரிசர்வ் பாங்கிற்கு அனுப்பி வைத்து அங்கிருந்து உரிய பணம் வழங்க ஒப்புதல் கிடைத்ததும் வழங்கப்படும். இதன் விவரம் அறிந்து அவர் அருகில் உள்ள போஸ்ட் ஆபீசில் ஏழுதச்சன் வழங்கி உள்ளார்.

தாள் ஒன்றுக்கு இன்சூரன்சாக ரூ.173 வீதம் 1,730 ம் மேலும் போஸ்ட் ஆபீஸ் ஊழியர்கள் கருணையாக கொஞ்சம் உதவி தொகையும் வழங்கி அவரை வழி அனுப்பி வைத்தனர். 20 ஆயிரத்திற்காக காத்திருக்கிறார் முதியவர்.வறுமையில் வாடும் இந்த முதியவரான தச்சரை ஒருவர் ஏமாற்றி இருப்பது பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us