சத்திரம்-சபரிமலை பாதையில் பக்தர்கள் செல்ல நேரம் நிர்ணயம்
சத்திரம்-சபரிமலை பாதையில் பக்தர்கள் செல்ல நேரம் நிர்ணயம்
ADDED : நவ 17, 2024 01:30 AM
மூணாறு: சபரிமலை மண்டல மகரவிளக்கு உற்ஸவம் துவங்கியதால், சத்திரம் வழியாக காட்டு பாதையில் ஐயப்ப பக்தர்கள் செல்லும் நேரம் நிர்ணயித்து இடுக்கி மாவட்ட நிர்வாகம் அறிவித்துஉள்ளது.
இடுக்கி மாவட்டம்வண்டிபெரியாறில் இருந்து சத்திரம், புல்மேடு வழியாக 26 கி.மீ., தொலைவில் சபரிமலை சன்னிதானம் உள்ளது. வண்டிபெரியாறில் இருந்து 14 கி.மீ., தொலைவில் உள்ள சத்திரம் வரை வாகனங்களில் சென்று, அங்கிருந்து 12 கி.மீ., தொலைவில் உள்ள சபரிமலைக்கு புல்மேடு வழியாக காட்டு பாதையில் நடந்து செல்ல வேண்டும்.
இந்தவழியில் எளிதில்சபரிமலை செல்லலாம்என்பதால், காட்டு பாதையை பயன்படுத்தும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இடுக்கி மாவட்ட நிர்வாகம் சத்திரத்தில் இருந்து காட்டு பாதை வழியாக பக்தர்கள் செல்லும் நேரத்தை நிர்ணயித்து உத்தரவிட்டது. அதன்படி சத்திரத்தில் இருந்து காலை 7:00 முதல் மதியம் 1:00 மணி வரை, அமுதகடவில் இருந்து காலை 7:00 முதல் மதியம் 2:30 மணி வரை, முக்குழியில் இருந்து காலை 7:00 முதல் மதியம் 3:00 மணி வரை பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவர்.
அதே போல் சபரிமலையில் இருந்து சத்திரத்திற்கு காலை 8:00 முதல் 11:00 மணி வரை பக்தர்கள் திரும்பலாம்.