ADDED : ஜன 12, 2024 11:52 PM

கேப்டன் துாங்கினால் கப்பல்மூழ்கிவிடும். துாக்கத்தில் இருக்கும் முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசால் கர்நாடகா, இந்தியாவின் டைட்டானிக் ஆக மாறியுள்ளது. மாநிலத்தில் வளர்ச்சி இல்லை, மின்சாரம் இல்லை, வேளாண்மை இல்லை.
விஜயேந்திரா, மாநில தலைவர், கர்நாடக பா.ஜ.,
கூட்டணியில் இணையுங்கள்!
பகுஜன் சமாஜ் கட்சி உண்மையிலேயே பா.ஜ., எதிர்ப்பு மனநிலையில் இருக்குமானால், அவர்கள் உடனடியாக 'இண்டியா' கூட்டணியில் இணைய வேண்டும். பா.ஜ.,வை எதிர்க்க மாயாவதிக்கு தைரியம் இல்லை என்றால் விட்டுவிடலாம்.
பிரமோத் திவாரி,ராஜ்யசபா எம்.பி., -- காங்கிரஸ்
தேசத்தின் தேவை அறிந்தவர்!
'ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியம்இல்லை; தேவையும் இல்லை' என மேற்கு வங்க முதல்வர் மம்தா கூறியுள்ளார். அதை சொல்வதற்கு அவர் யார்? நாட்டு மக்களின் தேவை என்னவோ, அதை நிறைவேற்றுபவர் பிரதமர் மோடி.
சுவேந்து அதிகாரி, மேற்கு வங்க எதிர்க்கட்சி தலைவர், பா.ஜ.,