ADDED : ஆக 03, 2011 09:42 PM
கூடலூர்: முல்லைப்பெரியாறு அணையில் தமிழக பொறியாளர் குழுவினர் ஆய்வு நடத்தனர்.
முல்லைப்பெரியாறு அணை அருகே கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கு 600 கோடி ரூபாயில் திட்ட அறிக்கை தயார் செய்து, ஐவர் குழுவிடம் வழங்கியுள்ளது. அணைகள் அமைந்திருக்கும் மாநிலங்களுக்கு அணையின் கட்டுப்பாட்டை வழங்கும் வகையில் உள்ள, அணைகள் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் இடுக்கி அணை அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெரியாறு அணையில் சேதம் ஏற்பட்டுள்ளது என, கேரள பொறியாளர்கள் புதிய புகாரை தெரிவித்துள்ளனர். இதனால் உண்மை நிலவரத்தை அறிய, தமிழக பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சம்பத்குமார் தலைமையில், பொறியாளர் குழுவினர் அணைப்பகுதிக்கு சென்றனர். மெயின் அணை, பேபி அணை, ஷட்டர் பகுதிகளை பார்வையிட்டனர். நிலநடுக்கத்தால் சேதமடைந்துள்ளது என கேரள அரசு கூறிய அணையின் மேல்பகுதியை பார்வையிட்டனர். அணையின் உண்மை நிலவரம் குறித்து தமிழக அரசுக்கு பொறியாளர் குழுவினர் அறிக்கை அனுப்ப உள்ளனர்.