உத்தேச வேட்பாளர் பட்டியலை தாக்கல் செய்ய... கர்நாடக அமைச்சர்களுக்கு காங்., மேலிடம் 'கெடு'
உத்தேச வேட்பாளர் பட்டியலை தாக்கல் செய்ய... கர்நாடக அமைச்சர்களுக்கு காங்., மேலிடம் 'கெடு'
ADDED : பிப் 16, 2024 07:08 AM

மைசூரு: லோக்சபா தேர்தலில் மைசூரு தொகுதி பா.ஜ., 'சீட்' தனக்கு தரும்படி, முன்னாள் ஐ.பி.எஸ்., பாஸ்கர் ராவ் கேட்டு உள்ளார்.
கடந்த 2013 முதல் 2018 வரை, சித்தராமையா முதல்வராக இருந்தார். அப்போது 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., சார்பில் மைசூரு தொகுயில் முதல்முறை போட்டியிட்ட, பிரதாப் சிம்ஹா வெற்றி பெற்றார்.
முதல்வரின் சொந்த ஊரில், காங்கிரஸ் வெற்றி பெற முடியவில்லை என, பா.ஜ.,வினர் கேலியும், கிண்டலும் செய்தனர்.
இந்த முறையும் அப்படி ஆகிவிடக் கூடாது என்பதில், முதல்வர் கவனமாக உள்ளார். மைசூரில் வெற்றி பெறும், வேட்பாளரை நிறுத்த முடிவு செய்து உள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளராக, சித்தராமையாவின் மகன் யதீந்திரா பெயர் அடிபடுகிறது. தற்போதைய பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹா, மீண்டும் போட்டியிட 'சீட்' கேட்டு வருகிறார்.
அவருக்கு 'சீட்' கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு வேளை் மைசூரு தொகுதியை, ம.ஜ.த.,வுக்கு விட்டு கொடுக்கப்படலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது. இப்படி ஒரு சூழ்நிலையில், மைசூரு தொகுதி பா.ஜ., 'சீட்' கேட்டு, முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி பாஸ்கர் ராவ், துண்டு போட்டு உள்ளார்.
“மைசூரு தொகுதியில் போட்டியிடும், அனைத்து தகுதியும் எனக்கு உள்ளது. வெற்றி பெறும் திறமையும் இருக்கிறது. போலீஸ் அதிகாரியாக இருந்தபோது, மைசூரு, குடகில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. குடகில் பல பிரச்னைகள் நடந்தபோதும், ஒரு துளி ரத்தத்தை கூட, மண்ணில் சிந்த நான் விட்டதில்லை,” என, அவர் கூறி உள்ளார்.
ஐ.பி.எஸ்., அதிகாரி பதவியை, ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.,வில் இணைந்த பாஸ்கர் ராவ், சட்டசபை தேர்தலில் சாம்ராஜ்பேட் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.