தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ இன்று இனிதாக- பெங்களூரு

இன்று இனிதாக- பெங்களூரு

இன்று இனிதாக- பெங்களூரு


ADDED : அக் 06, 2024 08:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 06, 2024 08:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

நவராத்திரி திருவிழா

 நவராத்திரியை முன்னிட்டு, பல்வேறு கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் செய்யப்படுகின்றன.

 நேரம்: காலை 10:00 சிறப்பு அபிேஷகம், மாலை 6:00 மணி: ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரம், சிறப்பு பூஜைகள், இடம்: ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில், ஸ்ரீராமுலா சன்னிதி தெரு, சிவாஜி நகர்.

 நேரம்: காலை 8:30 மணி: அபிேஷகம், 10:30 மணி: தீபாராதனை, மாலை 5:30 மணி: சிறப்பு ேஹாமம், 6:30 மணி: சிவலிங்க பூஜை அலங்காரம். இடம்: தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர்.

 நேரம்: காலை 5:00 மணி: அம்மனுக்கு அபிேஷகம், 8:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை: ஸ்ரீமஹா சண்டி ஹோமம்; 9:00 மணி: மஹா மங்களாரத்தி, இரவு: 8:15 மணி: மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல். ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் அலங்காரம். இடம்: சுயம்பு காளியம்மன் கோவில், ஹலசூரு.

 கஜலட்சுமி அம்மன் அலங்காரம். இரவு 7:30 மணி: தீபாராதனை. இடம்: ஸ்ரீ ஏகாம்பரீஸ்வரர் தருமராஜா கோவில், தருமராஜா கோவில் தெரு, சிவாஜி நகர்.

 நேரம்: இரவு 7:00 மணி: சிறப்பு அபிேஷகம், ஈஸ்வரன் அலங்காரம். இடம்: குங்கும திலக துர்கா தேவி சன்னிதி, ஸ்ரீசுந்தர சுவாமிகள் மடாலயம், ஹலசூரு

 நேரம்: காலை: சிறப்பு அபிேஷகம், அலங்காரம், லலிதா சஹஸ்ர நாமம், குங்கும அர்ச்சனை. மாலை 6:00 மணி: பிரணவ் ராஜேஷின் பக்தி பாடல்கள். இடம்: காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர்.

 நேரம்: காலை: 8:00 மணி: அபிேஷகம், 10:00 தீபாராதனை, மாலை 6:30 மணி: ஸ்ரீ நாகதேவி அலங்காரம், இரவு 8:00 மணி: தீபாராதனை. இடம்: தேவி கருமாரி அம்மன் கோவில், எம்.வி.கார்டன், ஹலசூரு.

 மலர் அலங்காரம். இரவு 7:00 மணி: சிறப்பு பூஜைகள். இடம்: ஸ்ரீ படவேட்டம்மன் கோவில், சிக்பஜார் சாலை, சிவாஜி நகர்.

 ஸ்ரீ லலிதா திரிபுர சுந்தரி அலங்காரம். இடம்: ஸ்ரீபெரியபாளையத்தம்மன் கோவில், வீலர்ஸ் ரோடு, காக்ஸ்டவுன்.

 நேரம்: காலை 8:00 மணி: ஸ்ரீ சிவசக்தி ஹோமம், மாலை 6:00 மணி: மாரம்மாவுக்கு சிவசக்தி அலங்காரம்; ஆஞ்சநேய சுவாமிக்கு பஞ்சரங்கி அலங்காரம். இடம்: ஸ்ரீ மாரம்மா கோவில் மற்றும் ஆஞ்சநேய சுவாமி கோவில், சின்னய்யனபாளையா, வில்சன்கார்டன், பெங்களூரு.

 ஸ்ரீ ஸ்ரீகைலாசநாதர் சிவன் அலங்காரம். இடம்: ஸ்ரீ படவேட்டம்மன் கோவில், தருமராஜா கோவில் தெரு, சிவாஜி நகர்.

 நேரம்: மாலை 6:00 மணி: சிறப்பு பூஜைகள், வெற்றிலை அலங்காரம். இடம்: மீனாட்சி தேவி சமேத சுந்தரேஸ்வரர் கோவில், மீனாட்சி கோவில் சாலை, சிவாஜி நகர்.

 வேப்பிலை அலங்காரம். மாலை 6:30 மணி: சிறப்பு பூஜைகள். இரவு 7.00 மணி பிரசாதம் வழங்கல். இடம்: ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஸ்ரீ திரவுபதி அம்மன் கோவில் அறக்கட்டளை, ஓல்டு மார்க்கெட் சாலை, சிவாஜி நகர்.

 கருட வாகனம் அலங்காரம். இடம்: ஸ்ரீஸ்ரீ ஜெகத்குரு சங்கராச்சார்யா மஹா சமஸ்தானம் தட்சணம்மான்ய ஸ்ரீ சாரதா பீடம், சிருங்கேரி, சிக்கமகளூரு.

 சிவபார்வதி அலங்காரம். இடம்: ஆதிபராசக்தி சக்திபீட தேவாலயம், ஜீவன் பீமா நகர்.

 வராஹி அலங்காரம். இடம்: சாமுண்டீஸ்வரி கோவில், சாமுண்டி மலை, மைசூரு.

 நேரம்: இரவு 7:00 மணி: மஹா மங்களாரத்தி. வராஹி அலங்காரம். இடம்: ஸ்ரீநவதுர்கா தேவி ஆலயம், நியூ பாகலுார் லே - அவுட்.

 வைஷ்ணவி அலங்காரம். இடம்: ஸ்ரீஸ்ரீஸ்ரீ தின்தினி மவுனகுரு சுவாமிகள் மடம், காக்ஸ்டவுன்.

 பால திரிபுர சுந்தரி அலங்காரம். மாலை 5:30 மணி: நாகேஸ்வரி பஜனை மண்டலியின் பஜனை. இடம்: ஸ்ரீஞான சரஸ்வதி கோவில், ஸ்ரீசங்கர சச்சிதானந்த ஆசிரமம், 7 வது குறுக்கு சாலை, சுஞ்சதகட்டே பிரதான சாலை, ஓம் சிவசக்தி நகர், பெங்களூரு.

 ஸ்ரீபஞ்சமி, ஸ்ரீ வராஹி அலங்காரம். இடம்: ஸ்ரீ கருமாரியம்மன் கோவில், தயானந்த நகர், ஸ்ரீராமபுரம்.

 விபூதி அலங்காரம். இடம்: ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில் சக்தி பீடம், 6 வது பிளாக், ராஜாஜி நகர்.

 அன்னபூர்ணேஸ்வரி அலங்காரம். இடம்: தண்டபானி ஞானமந்திரா டிரஸ்ட், 5வது பிளாக் ராஜாஜி நகர்.

 அன்னபூர்ணேஸ்வரி அலங்காரம். இடம்: சாமுண்டீஸ்வரி தேவி, வராஹி அம்மன் கோவில், 6 வது கிராஸ், 6 வது பிளாக், ராஜாஜி நகர்.

 நேரம்: காலை 8:30 மணி: மதுரை மீனாட்சி அலங்காரம்; மாலை 6:00 மணி: லலிதா சஹஸ்ரநாமம்; இரவு 7:00 மணி: தீபாராதனை; 7:15 மணி: பிரசாதம் வழங்கல். இடம்: தேவி ஸ்ரீ துளிர்கானத்தம்மன் கோவில், பாரதி நகர்.

 நேரம்: மாலை 6:30 மணி: சிறப்பு அபிேஷகம், அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம், தீபாராதனை. இடம்: ஸ்ரீ மாரியம்மன் கோவில், ஜெய்பாரத் நகர்.

 காமதேனு வாகனத்தில் மீனலோசினி தேவி அலங்காரம். இடம்: ஸ்ரீ ரேணுகா துர்கா பரமேஸ்வரி கோவில், வீரப்பிள்ளை தெரு, பெங்களூரு.

 மாதுளை அலங்காரம். நேரம்: மாலை 6:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை: சாய் கலைரங்கத்தின் காவ்யா மாணவர்கள் நடனம்; இரவு 7:30 மணி முதல் 8:30 மணி வரை: லஸ்லியா பைன் ஆர்ட்ஸ் அகாடமி மாணவர்களின் நடனம். இடம்: ஸ்ரீ மகான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம் மற்றும் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி கோவில், கங்காதர் செட்டி சாலை, ஹலசூரு.

 ஸ்ரீ தனலட்சுமி அலங்காரம். மாலை 5:00 மணி: ஸ்ரீ லட்சுமி சஹஸ்ரநாமம் மற்றும் கனகதாரா ஸ்தாத்ரம் பாராயணம். இடம்: ஸ்ரீராமலிங்க சவுடேஸ்வரி தேவாலயா, பன்னர்கட்டா சாலை, லக்கசந்திரா.

 நேரம்: மாலை 6:00 மணி: சந்தனம் அலங்காரம். இடம்: கெங்கையம்மன் கோவில், கணேஷ் புரம், ராபர்ட்சன்பேட்டை.

 நேரம்: மாலை 6:30 மணி: சிவன் அலங்காரம். இடம்: ஆதிசக்தி மாரியம்மன் கோவில், 4 வது பிளாக், ராபர்ட்சன்பேட்டை.

 நேரம்: மாலை 5:00 மணி: சிவ பார்வதிஅலங்காரம். இடம்: கருமாரியம்மன் கோவில் எம்.ஜி.மார்க்கெட், ராபர்ட்சன்பேட்டை.

 நேரம்: மாலை 6:00 மணி: பிரத்யங்கரா தேவி அலங்காரம், சிறப்பு பூஜைகள், தீபாராதனை, பிரசாதம் வழங்கல். இடம்: ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில், 2வது பிளாக், ராபர்ட்சன்பேட்டை.

 நேரம்: காலை 6:00 மணி: அபிேஷகம், சிறப்பு பூஜைகள்; மாலை 6:00 மணி: அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம், தீபாராதனை, பிரசாதம் வழங்கல். இடம்: முத்து மாரியம்மன் கோவில், அசோக் நகர், தங்கவயல்.

பொது

களிமண் பயிற்சி

 ஐந்து வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை; மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.

நடன பயிற்சி

 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு நடன பயிற்சி. நேரம்: இரவு 7:00 மணி முதல் 9:00 மணி வரை. இடம்: நியூயார்க் டேன்ஸ் கிளாசஸ், 49, ரங்கா காலனி சாலை, பி.டி.எம்., இரண்டாவது ஸ்டேஜ், பெங்களூரு.

மெழுகுவர்த்தி பயிற்சி

 16 வயதுக்கு மேற்பட்டோருக்கு மெழுகுவர்த்தி தயாரிக்க பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: பெயின்ட் கபே ஸ்டுடியோ, நான்காவது தளம், டிரீ பார்க் மெட்ரோ ஸ்டேஷன், இ.சி.சி., சாலை, காடுகோடி, ஒயிட்பீல்டு.

யோகா, கராத்தே

 ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

காமெடி

 காமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட அப் காமெடி. நேரம்: இரவு 9:00 மணி முதல் 10:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், கோரமங்களா.

 தி அண்டர் கிரவுண்டு காமெடி வழங்கும் கிரவுண்டேட் காமெடி நைட். நேரம்: இரவு 9:00 மணி முதல் 10:30 மணி வரை. இடம்: தி அண்டர் கிரவுண்டு காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

 பேர்புட் காமெடி புரொடக் ஷன்ஸ் வழங்கும் பேக்கிங் ஜோக்ஸ். நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக்ஹவுஸ், 426, ஏழாவது பிரதான சாலை, எச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட் முதல் பிளாக், பெங்களூரு.

 பஞ்ச் லைன் புரொடக் ஷன்ஸ் வழங்கும் ஜோக் இன் பிராகிரஸ். நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:30 மணி வரை மற்றும் 10:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.

 மினிஸ்ட்ரி ஆப் காமெடி வழங்கும் அபென்சிவ் லாப்டர். நேரம்: இரவு 10:00 மணி முதல் 11:15 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1,018, வுட்டன் ஸ்டிரீட், 80 அடி சாலை, கோரமங்களா.

 மான் செரி ரெஸ்ட்ரோ கபே வழங்கும் காமெடி ேஷா. நேரம்: இரவு 7:15 மணி முதல் 8:15 மணி வரை. இடம்: மான் செரி ரெஸ்ட்ரோ கபே, 545, ஜெ.பி.ஹரிசான், முதல் ஸ்டேஜ், இந்திரா நகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us