ஆன்மிகம்
திருப்பாவை சொற்பொழிவு
சாய்பாபா நகர் பொது நல சங்கம் சார்பில் 38 ம் ஆண்டு ஆண்டாள் திருப்பாவை சொற்பொழிவை ஒட்டி, ஆண்டாள் அருளிய திருப்பாவை தொடர் பாடல்கள் பாடப்படுகிறது. சொற்பொழிவாளர்: கே.பிரகாஷ். நேரம்: காலை 10:00 மணி. இடம்: சங்க மண்டபம், சாய்பாபா நகர், ஒன்பதாவது பிரதான சாலை, ஸ்ரீராமபுரம்.
தனுர் மாத பூஜைகள்
தனுர் மாத பூஜையை ஒட்டி, பல கோவில்களில் திருப்பாவை, திருவெம்பாவை பாடப்படுகிறது.
l நேரம்: காலை 5:00 மணி: நடை திறப்பு; 5:30 மணி: அபிேஷகம்; 6:50 மணி: தீபாராதனை; 7:00 மணி: பிரசாதம் வினியோகம். இடம்: அங்காள பரமேஸ்வரி கோவில், ஸ்ரீராமுலா சன்னிதி தெரு, சிவாஜி நகர்.
l நேரம்: காலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை திருப்பாவை பாராயணம், சாத்துமுறை, ஆரத்தி, தீர்த்த பிரசாத வினியோகம். இடம்: பான்பெருமாள் கோவில், ஹலசூரு
l நேரம்: காலை 5:00 மணி: நடை திறப்பு; 5:45 மணி: அபிேஷகம்; 6:00 மணி: திருப்பாவை, திருவெம்பாவை பாராயணம்; 7:00 மணி: தீபாராதனை; 8:15 மணி: சிறப்பு பூஜைகள்; 9:00 மணி: தீபாராதனை. இடம்: தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர்.
l நேரம்: காலை 4:30 மணி முதல், தங்கவயலில் உள்ள அனைத்து வைணவ கோவில்களிலும் 30 நாட்களுக்கு தமிழில் திருப்பாவை, திவ்விய பிரபந்தம் ஓதுதல், தீபாராதனை, பிரசாத வினியோகம்.
l நேரம்: அதிகாலை 4:00 மணி: நடை திறப்பு; 4:30 மணி: அபிேஷகம்; 5:30 மணி: தீபாராதனை. இடம்: காசி விஸ்வநாதேஸ்வரா கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர்.
l நேரம் :காலை 5:30 மணி: நடை திறப்பு; 6:00 மணி: அபிேஷகம், சிறப்பு பூஜைகள், பிரசாதம் வழங்கல்; 11:00 மணி: நடை அடைப்பு. இடம்: சோமேஸ்வரர் கோவில், ஹலசூரு.
l நேரம்: காலை 4:00 மணி: நடை திறப்பு; 5:00 மணி: சிறப்பு அபிேஷகம், பூஜைகள், தீபாராதனை; காலை 9:00 மணி: நடை அடைப்பு. இடம்: நாகேஸ்வரா கோவில், பேகூர்.
l நேரம்: அதிகாலை 4:30 மணி: சுப்ரபாதம்; 6:30 மணி: திருப்பாவை எழுச்சி; 8:00 மணி: மஹா மங்களாரத்தி. இடம்: திருவேங்கடா ராமானுஜர் சன்னிதி ஆண்டாள் கோவில், ராமகிருஷ்ணா மடம் சாலை, ஹலசூரு.
l நேரம்: காலை 7:00 மணி திருப்பாவை பாசுரம்; 9:00 மணி: தீபாராதனை. இடம்: ஸ்ரீவெங்கடேச பெருமாள் சன்னதி, திம்மையா சாலை, பாரதி நகர், பெங்களூரு.
அய்யப்பா பூஜை
ஸ்ரீ அய்யப்பா பக்த சமிதி சுவாமிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. நேரம்: காலை 9:00 மணி: சிறப்பு பூஜை; மதியம் 12:30 மணி: அன்னதானம். இடம்: ஸ்ரீ அய்யப்பன் கோவில், சுப்பையனபாளையா, பானஸ்வாடி பிரதான சாலை, பெங்களூரு.
பஜனை உற்சவம்
வாசவி சாஸ்த்ரா பஜனை உற்சவம் நடக்கிறது. நேரம்: மாலை 5:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை. இடம்: கன்னிகா பரமேஸ்வரி கோவில், 8வது தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு.
பொது
சிறுதானிய கண்காட்சி
கர்நாடகா விவசாய துறை சார்பில், 5வது சிறுதானிய கண்காட்சி நடக்கிறது. நேரம்: காலை 11:00 மணி. இடம்: திரிபுரவாசினி, அரண்மனை மைதானம், பெங்களூரு.
வீட்டு வாசலுக்கு திட்டம்
'வாசலுக்கு வந்தது அரசு - சேவைக்கு இருக்கட்டும் ஒத்துழைப்பு' என்ற பெயரில், அரசு திட்டங்கள் வீட்டு வாசலுக்கு வரும் திட்ட நிகழ்ச்சி நடக்கிறது.நேரம்: காலை 9:30 மணி. இடம்: அம்பேத்கர் பவன், எலஹங்கா நியூ டவுன், பெங்களூரு.
யோகா, கராத்தே
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
இசை
தி பிக்ஸ் வழங்கும் பிராஜெக்ட் பாலிவுட் நைட். நேரம்: இரவு 9:00 மணி முதல் 12:00 மணி வரை. இடம்: தி பிக்ஸ், 757, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.
l தி பார்க் வழங்கும் டெட்டி பியர் இரவு இசை. நேரம்: இரவு 10:00 மணி முதல் 12:00 மணி வரை. இடம்: தி பார்க், 14/7, எம்.ஜி., சாலை, அசோக் நகர், பெங்களூரு.
காமெடி
புளுபல்ப் காமெடி வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: நிருலாஸ், 3777, தரைதளம், எச்.ஏ.எல்., 2வது ஸ்டேஜ், இந்திரா நகர்.
l யக் காமெடி கிளப் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: யக் காமெடி கிளப், 2,212, முதல் தளம், 80 அடி சாலை, எச்.ஏ.எல்., 3வது ஸ்டேஜ், இந்திரா நகர்.
l மார்கோபோலோ கேப் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: 8:30 மணி முதல் 9:45 மணி வரை. இடம்: மார்கோபோலோ கேப், முதல் தளம், கே.எச்.பி., காலனி, கோரமங்களா.