ADDED : ஜூலை 07, 2024 02:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனேஸ்வரம்: ஒடிசாவில் இன்று புரி ஜெகன்நாதர் ரத யாத்திரை நடக்கிறது.
ஒடிசா மாநிலத்தில் புரி கடற்கரை நகரத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற புரி ஜெகன்நாதர் கோவில். இக்கோவிலின் உற்சவர்களான ஜெகன்நாதர், பலபத்திரர், சுபத்திரை ஆகியோர், ஆண்டுதோறும், தனித்தனியாக மூன்று ரதங்களில் புரி நகரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.
இந்தாண்டு, ஜெகன்நாதர் ரத யாத்திரை இன்று கோலாகலமாக துவங்குகிறது. இந்நிலையில் நான்கு நாள் பயணமாக நேற்று ஒடிசா வந்துள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு ரத யாத்திரையில் பங்கேற்கிறார்.
**************