இன்று உலக சிங்க தினம்; பாதுகாவலர்களுக்கு மோடி பாராட்டு
இன்று உலக சிங்க தினம்; பாதுகாவலர்களுக்கு மோடி பாராட்டு
ADDED : ஆக 10, 2024 11:29 AM

புதுடில்லி: உலக சிங்க தினத்தையொட்டி, பிரமிக்க வைக்கும் படங்களை பகிர்ந்த பிரதமர் மோடி, பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரையுயும் பாராட்டியுள்ளார்.
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 10ம் தேதி உலக சிங்கங்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. சிங்கங்களை பாதுகாப்பது, குறைந்து வரும் அவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்பது, அது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கம்.
இதையொட்டி சிங்கங்கள் புகைப்படங்களை சமூக வலை வலைதளத்தில், பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். அவரது அறிக்கை: உலக சிங்க தினத்தன்று, சிங்கங்களை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் நான் பாராட்டுகிறேன். நாம் அனைவரும் அறிந்தபடி, இந்தியாவில் குஜராத்தின் கிர் பகுதியில் அதிக சிங்கங்கள் வசிக்கின்றன.
எண்ணிக்கை உயர்வு
தொடர் பாதுகாப்பு முயற்சிகளின் காரணமாக, சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கு வரும் அனைவருக்கும், சிங்கத்தைப் பாதுகாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிளை கவனிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதே நேரத்தில் குஜராத் மக்களின் சிறப்பான விருந்தோம்பலும் கிடைக்கும். இவ்வாறு மோடி கூறியுள்ளார்.

