வெயிலில் வாடி வதங்கிய மக்கள்; 8 நகரங்களில் சதம் கடந்தது வெப்பம்!
வெயிலில் வாடி வதங்கிய மக்கள்; 8 நகரங்களில் சதம் கடந்தது வெப்பம்!
UPDATED : செப் 23, 2024 10:07 PM
ADDED : செப் 23, 2024 07:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் இன்று 8 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் மக்களை வாட்டி எடுத்தது. வெயில் நேரங்களில் வெளியில் வருவதை மக்கள் தவிர்ப்பது சிறந்தது என்று மருத்துவர்களும் அறிவுறுத்தி இருந்தனர்.
இந்நிலையில் இன்றும் வெயில் கடுமையாக சுட்டெரித்தது. தமிழகத்தில் 8 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்தது. அதிகபட்சமாக மதுரை விமான நிலைய பகுதியில் 105 டிகிரி பாரன்ஹீட் பதிவானது.
மற்ற பகுதியில் பதிவான வெப்பம் வருமாறு;
மதுரை நகர்- 104 டிகிரி பாரன்ஹீட்
கரூர் பரமத்தி, நாகை - 102 டிகிரி பாரன்ஹீட்
ஈரோடு, தூத்துக்குடி, திருச்சி - 101 டிகிரி பாரன்ஹீட்
தஞ்சை - 100 டிகிரி பாரன்ஹீட்