உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 29, 2026 08:27 AM

அ நிறம் | அளவு
டில்லி மெட்ரோ ரயிலில் பயணித்த பெண் ஒருவர், தன் குழந்தையை மலம் கழிக்க வைத்த சம்பவத்தை நேரில் கண்டு அதிர்ச்சியுற்ற இன்னொரு பெண், தனது, 'ரெட்டிட்' கணக்கில் அதை விவரித்த விதம், இணையத்தில் பலரை கவர்ந்துள்ளது.
டில்லியில் ஜன்பத் மற்றும் செக்ரட்டேரியட் இடையிலான பயணத்தில் ஒரு பெண், தன் குழந்தையை மலம் கழிக்க வைத்தார். 'இப்படி செய்யக்கூடாது, நீங்கள் செய்வது தவறு. நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள் என்று கூறியும், அந்த பெண் அதை புரிந்து கொள்ள வில்லை.
'அந்த காட்சியை கண்டதும் என் உடல் மட் டும் தான் அங்கு இருந்தது. என் ஆன்மா, மெட்ரோவில் இருந்து வெளியேறி விட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது' என்று வருத்தப்பட்ட பதிவு, இணையத்தில் பலராலும் பகிரப்பட்டுள்ளது.
