ADDED : நவ 28, 2025 11:40 PM

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில், 'ஜெய்ஹிந்த், வந்தே மாதரம்' கோஷம் கூடாது என, எம்.பி.,க்களுக்கு ராஜ்யசபா செயலகம் அறிவுறுத்தி உள்ளது. ஆனால், எங்களை யாராலும் மவுனமாக்க முடியாது. எங்கள் எம்.பி.,க்கள், 'வந்தே மாதரம்' என முழங்குவர். தைரியம் இருந்தால் பா.ஜ., எங்களை வெளியே தள்ளிப்பார்க்கட்டும்.
உத்தவ் தாக்கரே தலைவர், உத்தவ் சிவசேனா
பிரிட்டிஷ் கால சூழல்!
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி என்பது சாதாரண திருத்தம் அல்ல. ஜனநாயகத்தையே சிதைக்கும் பெரும் சதி. இன்று ஓட்டுக்கள் நீக்கப்படுகின்றன; நாளை நிலம், ரேஷன், ஜாதிச்சான்று என இறுதியில் நம் வங்கிக் கணக்குகள் கூட மறைந்து விடும். நாட்டை ஆங்கிலேயர் காலத்தை விட மோசமான நிலைக்கு தள்ளுவர்.
அகிலேஷ் யாதவ் தலைவர், சமாஜ்வாதி
ஆட்சிக்கு எதிரான சதி!
ஜம்மு வளர்ச்சி ஆணையம் நேற்று முன்தினம் பத்திரிகையாளரின் வீடு உட்பட பல கட்டடங்களை இடித்து அகற்றியது. கவர்னரால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தன்னிச்சையாக இந்த செயலில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடமும் ஆலோசிக்கவில்லை. இது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியின் பெயரை கெடுக்க முயற்சிக்கும் சதி. ஒமர் அப்துல்லா
ஜம்மு - காஷ்மீர் முதல்வர், தேசிய மாநாட்டு கட்சி

