உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஏப் 12, 2026 07:46 PM

அ நிறம் | அளவு
மூணாறு: மூணாறு அருகே, ஆற்றுக்கு வர துவங்கிய காட்டு யானைகள் கூட்டத்தை கண்டு சுற்றுலா பயணியர் மகிழ்ந்தனர்.
மூணாறு அருகே மாங்குளம் ஊராட்சியில் உள்ள ஆனக்குளம் ஆற்றில், தண்ணீர் குடிக்க தினமும் காட்டு யானைகள் வந்து செல்லும். கோடை காலம் தொடங்கியதும் ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் யானைகள் வரவில்லை. இதனால், சுற்றுலா பயணியர் ஏமாற்றம் அடைந்தனர்.
ஒரு வாரமாக பெய்த கோடை மழையால், ஆனக்குளம் ஆற்றில் நீர்வரத்து உயர்ந்தது. இதனால், தண்ணீர் குடிக்க காட்டு யானைகள் மீண்டும் கூட்டமாக வருகை தந்தன. இதை கண்டு, சுற்றுலா பயணியர் மகிழ்ந்தனர்.
