'டபுள் டெக்கர்' பஸ்சில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
'டபுள் டெக்கர்' பஸ்சில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
ADDED : பிப் 09, 2025 11:50 PM

மூணாறு ; கேரள மாநிலம் மூணாறில் ' டபுள் டக்கர்' பஸ்சில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் நேற்று அதிக ஆர்வம் காட்டினர்.
மூணாறில் 'டபுள் டெக்கர்' பஸ் சேவை நேற்று முன்தினம் முதல் பயன்பாட்டிற்கு வந்தது. இதில் பயணித்தவாறு இயற்கை அழகை ரசிக்கும் வகையில் முற்றிலும் கண்ணாடி இழை கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது. நவீன இருக்கைகள், மியூசிக் சிஸ்டம், குடிநீர், அலைபேசி 'சார்ஜ்' செய்யும் வசதி உள்ளிட்டவை செய்யப்பட்டு உள்ளன.
புறப்படும் நேரம்
கீழ் தளத்தில் 12, மேல் தளத்தில் 38 என 50 இருக்கைகளும், ஐந்து படுக்கை வசதிகளும் உள்ளன.
பழைய மூணாறில் உள்ள கேரள அரசு பஸ் டிப்போவில் இருந்து தினமும் காலை 7:00, 10:00, மதியம் 3:30 மணி ஆகிய நேரங்களில் புறப்பட்டு கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் தேவிகுளம், கேப் ரோடு வழியாக பெரியகானல் எஸ்டேட் வரை சென்று திரும்பும்.
மொத்த பயண துாரம் 40 கி.மீ., பசுமையான தேயிலை தோட்டங்கள் இடையே செல்லும் வளைவான சாலைகள், கேப்ரோட்டில் மேகக்கூட்டங்கள் உள்ளிட்டவற்றை ரசிக்கலாம்.
இதில் பயணிக்க கீழ் தளத்தில் நபர் ஒன்றுக்கு ரூ. 200, மேல் தளத்தில் ரூ.400 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

