sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கழிவுநீர் தொட்டியில் விஷ வாயு கசிவு: மூச்சு திணறி 3 துப்புரவு தொழிலாளர்கள் உள்ளிட்ட 4 பேர் பலி

/

கழிவுநீர் தொட்டியில் விஷ வாயு கசிவு: மூச்சு திணறி 3 துப்புரவு தொழிலாளர்கள் உள்ளிட்ட 4 பேர் பலி

கழிவுநீர் தொட்டியில் விஷ வாயு கசிவு: மூச்சு திணறி 3 துப்புரவு தொழிலாளர்கள் உள்ளிட்ட 4 பேர் பலி

கழிவுநீர் தொட்டியில் விஷ வாயு கசிவு: மூச்சு திணறி 3 துப்புரவு தொழிலாளர்கள் உள்ளிட்ட 4 பேர் பலி

1


UPDATED : ஜூன் 03, 2025 07:29 PM

ADDED : ஜூன் 03, 2025 07:22 PM

Google News

UPDATED : ஜூன் 03, 2025 07:29 PM ADDED : ஜூன் 03, 2025 07:22 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நபரங்பூர்:ஒடிசா மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்டிருந்த கழிவு நீர் தொட்டியை துப்புரவு தொழிலாளர்கள் அகற்றிக்கொண்டிருந்தபோது விஷ வாயு தாக்கியதில் 3 பேரை காப்பாற்ற சென்ற ஒருவர் உள்பட 4 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டத்தின் நந்தஹந்தி தொகுதியில் உள்ள படல்குடா கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட சுமார் 10க்கு 10 அடி கழிவு நீர் தொட்டியின் மையப்பலகையை துப்புரவு தொழிலாளர்கள் அகற்றி கொண்டிருந்தனர். கழிவு நீர் தொட்டிக்குள் முதலில் இரண்டு தொழிலாளர்கள் நுழைந்தனர். அப்போது தான் அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டிருக்கிறது. உடனே மற்றொரு தொழிலாளி உள்ளே சென்றார் அவருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டது. இந்த 3 தொழிலாளர்களையும் காப்பாற்ற, அந்த வழியில் வந்த ஒருவர் முயன்றார்.

அவரும் மூச்சு திணறி மயங்கினார். இந்நிலையில் உள்ளூர்வாசிகள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தீயணைப்பு துறையினர் கூறியதாவது:

தகவல் அறிந்து வந்த நாங்கள் நான்கு பேரையும் கழிவு நீர் தொட்டியில் இருந்து வெளியே எடுத்து, அவர்களை நபரங்பூர் மாவட்ட தலைமையக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது 3 தொழிலாளர்களும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.காப்பாற்ற வந்த வழிபோக்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

தொழிலாளர்களிடம் பாதுகாப்பு உபகரணங்கள் அல்லது ஆக்ஸிஜன் ஆதரவு இல்லை என்றும், எந்த பாதுகாப்பும் இல்லாமல் தொட்டிக்குள் நுழைந்ததாகவும் உள்ளூர்வாசிகள் எங்களிடம் தெரிவித்த நிலையில், உரிய விசாரணையைத் தொடங்கியுள்ளோம். தடயவியல் சோதனைகள் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைகள் மரணத்திற்கான சரியான காரணத்தையும் அவர்கள் சுவாசித்த வாயுக்களின் தன்மையையும் வெளிவரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us