தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/இந்தியா - பாக்., இடையே 'டிராக் 2' பேச்சு நடக்கவில்லை: ராம் மாதவ்

இந்தியா - பாக்., இடையே 'டிராக் 2' பேச்சு நடக்கவில்லை: ராம் மாதவ்

இந்தியா - பாக்., இடையே 'டிராக் 2' பேச்சு நடக்கவில்லை: ராம் மாதவ்

2


UPDATED : ஜூன் 28, 2026 04:50 AM

ADDED : ஜூன் 28, 2026 04:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 28, 2026 04:50 AM ADDED : ஜூன் 28, 2026 04:04 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: ''இலங்கையில், இந்தியா - பாக்., இடையே, 'டிராக் 2' எனப்படும் அதிகாரப்பூர்வமற்ற பேச்சு நடக்கவில்லை. தேவையற்ற விவகாரத்துக்கு முட்டாள்தனமாக புனையப்பட்ட செய்தி இது,'' என, பா.ஜ., மூத்த தலைவர் ராம் மாதவ் தெரிவித்துஉள்ளார்.

நம் அண்டை நாடான இலங்கையின் கொழும்பு நகரில், ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ஐ.ஐ.எஸ்.எஸ்., எனப்படும், சர்வதேச உத்திசார் ஆய்வு என்ற தனியார் நிறுவனம், சமீபத்தில் நடத்திய நிகழ்ச்சியில், இந்தியா - பாக்., இடையே, 'டிராக் 2' எனப்படும் அதிகாரப்பூர்வமற்ற பேச்சு நடந்ததாக செய்தி வெளியானது.

இதில், இந்தியா சார்பில் பா.ஜ., மூத்த தலைவரும், இந்தியா பவுண்டேஷன் தலைவருமான ராம் மாதவ், ராணுவ முன்னாள் தளபதி எம்.எம்.நரவனே, முன்னாள் துாதர் ருச்சி கன்ஷ்யாம் ஆகியோரும், பாக்., தரப்பில் முன்னாள் துாதர் சஜ்ஜாத் ஹைதர் கான், முன்னாள் அமைச்சர் ஷெரி ரஹ்மான், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி இஸ்பந்தியார் அலி கான் படவுடி ஆகியோரும் பங்கேற்றதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து, பா.ஜ., மூத்த தலைவர் ராம் மாதவ் நேற்று அளித்த விளக்கம்: இலங்கையில் நடந்தது, இந்தியா - பாக்., இடையேயான, 'டிராக் 2' பேச்சு அல்ல. அது, ஐ.ஐ.எஸ்.எஸ்., நிறுவனத்தின் வருடாந்திர தெற்காசிய உரையாடல் நிகழ்ச்சி. இதில், இந்தியா, இலங்கை, அமெரிக்கா, பிரிட்டன், ஆப்கானிஸ்தான், பாக்., ஆகிய நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் பங்கேற்றனர்.

இத்தனை நாடுகள் பங்கேற்கும் ஒரு மாநாட்டை, இந்தியா - -பாக்., இடையிலான பேச்சு எனக் கூறுவது முற்றிலும் தவறானது. தேவையற்ற விவகாரத்திற்கு முட்டாள்தனமாக புனையப்பட்ட செய்தி இது.

இரு நாட்கள் நடந்த இந்த மாநாட்டில் நான் முழுமையாக பங்கேற்கவில்லை. ஒரு அமர்வில் உரையாற்ற மட்டுமே அழைக்கப்பட்டிருந்தேன். உரையை முடித்ததும் அங்கிருந்து கிளம்பி விட்டேன். அவ்வளவு தான். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us