உ.பி.,யில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து: 7 குழந்தைகள் உட்பட 22 பேர் பலி
உ.பி.,யில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து: 7 குழந்தைகள் உட்பட 22 பேர் பலி
UPDATED : பிப் 24, 2024 03:34 PM
ADDED : பிப் 24, 2024 01:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏரியில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில், 7 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் டிராக்டர் ஒன்று ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மகா பூர்ணிமாவை முன்னிட்டு கங்கைக்கு புனித நீராட டிராக்டரில் சென்றுக் கொண்டிருந்த போது, விபத்து ஏற்பட்டுள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த விபத்தில் 7 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழந்து உள்ளனர். உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து, ‛‛மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க உத்தரவிட்டுள்ளேன்'' என எக்ஸ் சமூகவலைதளத்தில் யோகி ஆதித்யநாத் பதிவிட்டுள்ளார்.