'வரிப்பிடித்தம் செய்வதற்கான விகிதத்தில் மறுசீரமைப்பு தேவை' நிதியமைச்சகத்துக்கு வர்த்தக கூட்டமைப்புகள் கோரிக்கை
'வரிப்பிடித்தம் செய்வதற்கான விகிதத்தில் மறுசீரமைப்பு தேவை' நிதியமைச்சகத்துக்கு வர்த்தக கூட்டமைப்புகள் கோரிக்கை
ADDED : நவ 09, 2024 03:43 AM
புதுடில்லி: 'வரி செலுத்துவோரின் சிரமங்களைக் குறைக்கும் வகையில், டி.டி.எஸ்., வரிப்பிடித்தம் செய்வதற்கான விகிதங்களை மறுசீர-மைக்க வேண்டும்' என, வர்த்தக அமைப்புகள் மத்திய நிதிய-மைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.
வரும் 2025- - 26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட், அடுத்தாண்டு பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், இந்திய தொழில் வர்த்தக சபை சம்மேளனம் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை தனித்தனியே, மத்திய வருவாய் செயலர் சஞ்சய் மல்ஹோத்ராவிடம் அளித்-துள்ள, பட்ஜெட்டுக்கு முந்தைய பரிந்துரையில் தெரிவித்துள்ளதா-வது:
வரி செலுத்துவோரின் சிரமங்களை குறைப்பதுடன், தேவை-யற்ற வழக்கு வாய்தாக்களை குறைக்கும் வகையில், டி.டி.எஸ்., விகிதங்களை எளிமைப்படுத்த வேண்டும்.
வருமான வரி சட்டத்தின் கீழ், 37 வகையான செலுத்தல்க-ளுக்கு, 0.1 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை பல்வேறு விகிதங்-களில் டி.டி.எஸ்., தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. இவற்றின் வகைப்படுத்தலில் தேவையற்ற குழப்பம் ஏற்படு-வதால், தொழில்களுக்கு கணிசமான ரொக்கம் கிடைப்பது தடை-படுகிறது.
மேலும், அரசு ரீபண்டு தொகைக்கு வட்டி செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. பல்வேறு வகையான செலுத்தல்களுக்கு, 5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக டி.டி.எஸ்., கட்டணத்தை குறைப்பதன் வாயிலாக, அரசு எளிமைப்படுத்தலை மேற்கொள்-வது நல்ல துவக்கமாக இருக்கும்.
மேலும், டி.டி.எஸ்., விகிதத்தை, சம்பளத்திற்கான விகிதம் குறைவாகவும், லாட்டரி மற்றும் ஆன்லைன் விளையாட்டு கள் உள்ளிட்டவற்றிற்கு அதிகமாகவும், பிற பல்வேறு வகையான செலுத்தல்களுக்கு நிலையான விகிதம் எனவும் மூன்று அடுக்குக-ளாக பிரித்து வகைப்படுத்தலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளன.