sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வர்த்தக ஒப்பந்தத்தால் நமது தரவுகளை பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பும்: சொல்கிறார் ராகுல்

/

வர்த்தக ஒப்பந்தத்தால் நமது தரவுகளை பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பும்: சொல்கிறார் ராகுல்

வர்த்தக ஒப்பந்தத்தால் நமது தரவுகளை பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பும்: சொல்கிறார் ராகுல்

வர்த்தக ஒப்பந்தத்தால் நமது தரவுகளை பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பும்: சொல்கிறார் ராகுல்


ADDED : பிப் 11, 2026 10:26 PM

Google News

ADDED : பிப் 11, 2026 10:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் காரணமாக, , நமது தரவை நமது சொந்த நலனுக்காக பயன்படுத்துவதற்கான ஒவ்வொரு நடவடிக்கையும் எதிர்க்கப்படும் என காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு தான், இந்த விவகாரத்தை உலக வர்த்தக மையத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நிவாரணம் பெற்றுத் தந்தது.மோடி அரசின் தலையீடு காரணமாக தான், உணவு பொருட்கள் கொள்முதல் செய்யப்படுவதுடன், ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. கோவிட் காலத்தில், ஏழைகளுக்கு உதவி செய்தது. அவர்கள் தான் ஏழைகள், விவசாயிகளின் நலனை விற்றனர். ஏழை விவசாயிகளை விற்றனர். இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

ஏஐ புரட்சியானது அச்சுறுத்தலையும் வாய்ப்புகளையும் கொண்டு வருகிறது.நமது பொருளாதாரத்தின் ஒளிரும் நட்சத்திரமாக திகழும் ஐடி மற்றும் சேவைத்துறை ஆபத்தில் உள்ளது. வரவிருக்கும் புயலுக்கு தயாராகவில்லை என்றால், ஆயிரக்கணக்கான மென்பொருள் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழப்பார்கள்.அதேநேரத்தில் வாய்ப்புகளும் உள்ளன.

ஏஐ இயந்திரத்திற்கு முக்கிய ஆற்றலாக தகவல் உள்ளது. நான் பார்லிமென்டில் கூறியது போல், இந்தியாவின் பெரிய சொத்தாக நமது மக்கள் உள்ளனர். நம்மால் மகத்தான தரவுகளை உருவாக்க முடியும்.இன்னும் சில நாட்களில் அரசு, ஏஐ மாநாட்டினை நடத்த உள்ளது. 140 கோடி மக்கள் தொகையை கொண்ட ஒரு நாடு, நமது தரவுகளை எவ்வாறு நமது சொந்த விதிமுறைகளின்படி உலகளாவிய தலைமைத்துவத்தை நிலைநிறுத்த முடியும் என்பதை நிரூபிக்க இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பாக இருக்க வேண்டும்.

ஆனால், வர்த்தக ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவிடம் பிரதமர் மோடி சரண் அடைந்து விட்டார். இந்த ஒப்பந்தப்படி வர்த்தகத்திற்கான தடைகளை நீக்குதல் என்ற காரணத்தினால், நமது தரவை நமது சொந்த நலனுக்காக பயன்படுத்துவதற்கான ஒவ்வொரு நடவடிக்கையும் எதிர்க்கப்படும். ஏற்கனவே பெரிய வெளிநாட்டு நிறுவனங்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், யுடியூப், அமேசான் போன்றவை நமது தரவுகளில் ஏகபோத உரிமையை அனுபவித்து வருகின்றன.

தற்போது, இந்த ஒப்பந்தம் மூலம் இந்திய நிறுவனங்கள் 1. இந்தியாவில் உள்ள 150 கோடி பேரின் தரவுகளை பாதுகாப்பாக சேமிக்கவும்,2.கோட்கள் மற்றும் அல்காரிதம்களில் வெளிப்படைத்தன்மை பெறவும்3.நமது தரவை பயன்படுத்தி அவர்கள் சம்பாதிக்கும் லாபத்திற்கு வரி விதிக்கவும் சிரமப்படும். இந்தியாவின் பிரதான வளத்தை ஒரு வெளிநாட்டு சக்தியிடம் ஒப்படைக்க நமது பிரதமர் அழுத்தம் கொடுக்கப்பட்டு இருக்கிறார். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us