ADDED : மே 04, 2026 05:28 AM

தோல், காலணி துறையினர்
அரசுக்கு கோரிக்கை
மே ற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றத்தால் இறக்குமதி செலவு கிட்டத்தட்ட 60 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனால், செயற்கை தோல், இயந்திரங்கள் மற்றும் ரசாயனங்கள் போன்ற முக்கிய மூலப்பொருட்களுக்கு இறக்குமதி வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று தோல் மற்றும் காலணி தொழில்துறையினர் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மொபைல் வழி
பண பரிவர்த்தனை உயர்வு
உ லகளவில் மொபைல் வழி பண பரிவர்த்த னைகள் கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்து, கிட்டத்தட்ட 200 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளதாக ஜி.எஸ்.எம்.ஏ., நிறுவன ஆய்வு அறிக்கை கூறுகிறது. இதில், 2025ல் மட்டும் கிட்டத்தட்ட 42 சதவீதம் வளர்ச்சியுடன் வணிக பரிவர்த்தனைகள் பெரும் பங்கு வகித்துள்ளன.
அல்ட்ராடெக் சிமென்டுக்கு
நீதிமன்றத்தில் வெற்றி
அ ல்ட்ராடெக் சிமென்ட் நிறுவனம் தனது வர்த்தக பெயரை முறைகேடாக பயன்படுத்தியதாக, ஷிவ் சிமென்ட் நிறுவனத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கில் வெற்றி பெற்றுள்ளது.
'அல்ட்ரா ப்ளஸ்' போன்ற பெயர்களில் சிமெண்ட் விற்க ஷிவ் சிமென்ட்டுக்கு மும்பை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், அல்ட்ராடெக் நிறுவனத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
