சிவாஜி நகர் பஸ் நிலையம் பகுதியில் ஒரு மாதம் போக்குவரத்து தடை
சிவாஜி நகர் பஸ் நிலையம் பகுதியில் ஒரு மாதம் போக்குவரத்து தடை
ADDED : நவ 11, 2024 05:19 AM

பெங்களூரு: மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடக்க உள்ளதால், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர் பஸ் நிலைய பகுதியில், இன்று முதல் ஒரு மாதம், வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கை:
சிவாஜி நகர் சதுக்கம், சிவாஜி நகர் பஸ் நிலைய பகுதியில் பெங்களூரு மெட்ரோ நிறுவனம் பணிகளை மேற்கொண்டுஉள்ளது.
எனவே இப்பகுதியில் நாளை (இன்று) முதல் ஒரு மாதம் அனைத்து விதமான வாகனங்களின் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாலேகுந்திரி சந்திப்பில் (இந்தியன் எக்ஸ்பிரஸ்) இருந்து, சிவாஜி சதுக்கம் வழியாக சிவாஜி நகர் பி.எம்.டி.சி., பஸ் நிலையத்துக்கு வரும் பஸ்கள் உட்பட அனைத்து வாகனங்கள், மாற்று பாதையில் செல்ல வேண்டும்.
l பாலேகுந்திரி சந்திப்பில் இருந்து, சிவாஜி நகர் பி.எம்.டி.சி., பஸ் நிலையத்துக்கு வரும் வாகனங்கள், டிராபிக் ஹெட் குவார்ட்டர்ஸ் சந்திப்பில், இடது புறம் திரும்பி, இன்பேன்ட்ரி சாலை வழியாக, சென்ட்ரல் தெரு சந்திப்பில் இடது புறம் திரும்பி, சென்ட்ரல் தெரு சாலை வழியாக, சிவாஜிநகர் பஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டும்.
l சிவாஜி சாலையில் இருந்து, சிவாஜி நகர் பஸ் நிலையத்துக்கு வரும் வாகனங்கள், சிவாஜி சதுக்கத்தில் வலது புறம் திரும்பி, வெங்கடசாமி நாயுடு சாலை வழியாக சென்று, பாலேகுந்திரி சந்திப்பை அடைந்து;
அதன்பின் இடது புறம் திரும்பி, டிராபிக் ஹெட் குவார்ட்டர்ஸ் சந்திப்பில், இடது புறம் திரும்பி இன்பேன்ட்ரி சாலை வழியாக, சென்ட்ரல் தெரு சந்திப்புக்கு வந்து, இடது புறம் திரும்பி, சிவாஜி நகர் பஸ் நிலையத்தை நோக்கி செல்லலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
� மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதால், சிவாஜி நகர் பஸ் நிலையத்துக்கு வரும் பஸ்களின் வழித்தடங்கள் இன்று முதல் மாற்றப்பட்டுள்ளன. பஸ் நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் பஸ். � சிவாஜி சாலையில் இருந்து வரும் பஸ்கள், தண்டு மாரியம்மன் கோவில் முன் சதுக்கத்தில், வலது புறம் திரும்பி செல்லும். � குயின்ஸ் சாலையில் இருந்து வரும் பஸ்களும், அம்பேத்கர் வீதியில் இருந்து வரும் பஸ்களும் சிவாஜி நகர் பஸ் நிலையத்துக்கு செல்லும் பாலேகுந்திரி சதுக்கம் (இண்டியன் எக்ஸ்பிரஸ் சதுக்கம்). இடம்: பெங்களூரு.