ADDED : அக் 06, 2024 08:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:மாயாபுரி மேம்பாலத்தில் சீரமைப்புப் பணிகள் நடப்பதால், சாலையில் ஒரு பகுதியில் 30 நாட்களுக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
மாயாபுரி மேம்பாலத்தில் சீரமைப்புப் பணி நேற்று துவங்கியது. இந்தப் பணிகள் அடுத்த 30 நாட்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், ராஜா கார்டனில் இருந்து நரைனா வரை மேம்பாலத்தின் ஒரு பகுதியில் இம்மாத இறுதி வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக பொதுப் பணித்துறை அறிவித்துள்ளது.
ராஜா கார்டன் மற்றும் பஞ்சாபி பாக் பகுதியில் இருந்து தவுலா குவான் மற்றும் நரைனா செல்வோர் மாயாபுரி மேம்பாலம் துவங்கும் பகுதியில் இருந்து சர்வீஸ் சாலையில் மாயாபுரி சவுக் சிக்னல் வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

