ADDED : மார் 14, 2024 01:00 AM
புதுடில்லி:டில்லி மாநகரப் போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
டில்லி ஜஹவர்லால் நேரு மைதானத்தில்நடக்கும் நிகழ்ச்சியில் டில்லியின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் 60,000 பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
பீஷ்ம பிதாமா மார்க், லாலா லஜ்பத் ராய் மார்க், லோதி சாலை, மதுரா சாலை, ஜோர் பாக் சாலை, தயாள் சிங் சாலை, மேக்ஸ் முல்லர் மார்க், அரவிந்தர் மார்க், பாரபுல்லா சாலை, டாக்டர் ஜாகிர் ஹூசைன் மார்க், லாலா லஜ்பத் ராய் மார்க், லோதி சாலை கிராசிங் மற்றும் லோதி சாலை மேம்பாலம் ஆகிய இடங்களில் இன்று மதியம் 12:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
டில்லிவாசிகள் இந்த சாலைகளைத் தவிர்த்து வேறு பாதையிலோ அல்லது பொதுப் போக்குவரத்து அதிலும் குறிப்பாக மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.
