ADDED : அக் 04, 2024 08:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:செங்கோட்டையில் ராம்லீலா நிகழ்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு, மத்திய டில்லி சுபாஷ் மார்க்கில் வரும் 12ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
செங்கோட்டை வளாகத்தில் ராம்லீலா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதையடுத்து, சுபாஷ் மார்க்கில் வரும் 12ம் தேதி வரை மாலை 5:00 மணி முதல் நள்ளிரவு 12:30 மணி வரை வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
டில்லி மாநகரப் போக்குவரத்து கழக பஸ்கள் மற்றும் கிளஸ்டர் பஸ்கள், கனரக மற்றும் வணிக வாகனங்களும் சுபாஷ் மார்க்கில் டில்லி கேட் முதல் சத்தா ரயில் நிலையம் வரை அனுமதி இல்லை.
இந்த தகவலை டில்லி மாநகரப் போலீஸ் தெரிவித்துள்ளது.