முதல்ல...பாஸ் ;அப்புறம்...பெயில்: ‛‛ஜெய் ஸ்ரீராம்'' என எழுதிய மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்
முதல்ல...பாஸ் ;அப்புறம்...பெயில்: ‛‛ஜெய் ஸ்ரீராம்'' என எழுதிய மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்
UPDATED : ஏப் 25, 2024 07:41 PM
ADDED : ஏப் 25, 2024 07:28 PM

லக்னோ: உ.பி. மாநிலம் பல்கலை. ஒன்றின் தேர்வு விடைத்தாளில் ஜெய்ஸ்ரீராம், மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பெயரை விடையாக எழுதிய 4 மாணவர்களுக்கு 40 சதவீதம் கூடுதல் மதிப்பெண் வழங்கி பாஸ் ஆனதும், பின் மறு மதிப்பீடுசெய்ததில் பெயில் ஆனதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உபி. மாநிலத்தில் உள்ள முக்கிய பல்கலைகழகங்களில் பூர்வாஞ்சல் பல்கலைகழகமும் ஒன்று. இங்கு சமீபத்தில் டி.பார்ம் எனும் மருந்தியியல் படிப்பிற்கான பருவத்தேர்வு முடிவுகள் வெளியாயின. இதில் நான்கு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளது குறித்து முன்னாள் மாணவர் ஒரு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நான்கு மாணவர்கள் எழுதிய விடைத்தாளை நகலாக கேட்டார்.
அதற்கு பல்கலை. நிர்வாகம் அளித்துள்ள தகவலில், நான்கு மாணவர்கள் விடைத்தாளில் ‛‛ஜெய் ஸ்ரீராம்'' எனவும், பிரபல கிரிக்கெட் வீரர்களின் பெயரை விடையாக எழுதி பாஸ்ஆனது தெரியவந்தது.
அவர்கள் பாஸ் ஆனது குறித்து மீண்டும் விடைத்தாள் பரிசீலிக்கப்பட்டது. தொடர்ந்து தேர்வு தாள் திருத்தப்பட்டதில் அவர்கள் பெயில் ஆனது தெரியவந்தது. விவரம் கேட்ட மாணவர் , பல்கலை வேந்தர் என்ற முறையில் கவர்னருக்கு இது சம்பந்தமாக புகார் அனுப்பினார். இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த கவர்னர் உத்தரவிட்டார்.
இது குறித்து பல்கலை. துணைவேந்தர் கூறுகையில் கவர்னர் உத்தரவு கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவர் என தெரிவித்தார்.

