நடைபாதையில் தூங்கியவர்கள் மீது லாரி மோதியது; இரண்டு குழந்தைகள் உட்பட 3 பேர் பலி
நடைபாதையில் தூங்கியவர்கள் மீது லாரி மோதியது; இரண்டு குழந்தைகள் உட்பட 3 பேர் பலி
ADDED : டிச 23, 2024 10:11 AM

மும்பை: புனேயில் நடைபாதையில் தூங்கியவர்கள் மீது லாரி ஏறி இறங்கியதில், இரண்டு குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் புனே நகரின் வகோலி சௌக் பகுதியில், நடைபாதையில் 12 பேர் அசந்து தூங்கி கொண்டு இருந்தனர். அந்த வழியாக, வந்த லாரி, நிலைதடுமாறி அவர்கள் மீது ஏறி இறங்கியது. இதில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனை செய்ய, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், 6 பேர் பலத்த காயமுற்றனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. லாரியை இயக்கிய, 26 வயதான சங்கரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். போலீசார் விசாரணையில் டிரைவர் குடிப்போதையில் இருந்தது தான் விபத்துக்கு காரணம் என தெரியவந்தது.
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். குடிப்போதையில் லாரியை சங்கர் இயக்கியதால், 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.