மருத்துவமனை பராமரிப்பு பணியில் துயர சம்பவம் : விஷவாயு தாக்கி டில்லியில் இரு தொழிலாளர் உயிரிழப்பு
மருத்துவமனை பராமரிப்பு பணியில் துயர சம்பவம் : விஷவாயு தாக்கி டில்லியில் இரு தொழிலாளர் உயிரிழப்பு
ADDED : ஜூலை 09, 2025 06:18 PM

புதுடில்லி: டில்லியில் தனியார் மருத்துவமனை கழிவுநீர் வாய்க்கால் பராமரிப்பு பணியின்போது, விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
மேற்கு டில்லியின் பஸ்சிம் விஹாரில் ஒரு ஆக்ஷன் பாலாஜி என்ற தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு கழிவுநீர் சுத்தம் செய்யும் வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தத்தின் கீழ் ஒப்பந்ததாரரால் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.
பராமரிப்பு பணியில் இருந்த தொழிலாளர்கள் இருவரும், கழிவு நீரில் இருந்து கிளம்பிய விஷவாயு தாக்கி மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.
போலீசார் கூறியதாவது:
உயிரிழந்தவர்கள் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பிர்ஜேஷ் 26, விக்ரம் 30, என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக,அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளன. சம்பவ இடத்தை ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரிக்க குற்றவியல் குழு மற்றும் தடயவியல் அறிவியல் ஆய்வகக் குழு வரவழைக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்ததாரரின் பங்கு மற்றும் பராமரிப்பு பணியின் போது எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு போலீஸ் அதிகாரி கூறினார்.