sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பத்ரிநாத், கேதார்நாத் செல்ல விரைவில் ரயில் சேவை!

/

பத்ரிநாத், கேதார்நாத் செல்ல விரைவில் ரயில் சேவை!

பத்ரிநாத், கேதார்நாத் செல்ல விரைவில் ரயில் சேவை!

பத்ரிநாத், கேதார்நாத் செல்ல விரைவில் ரயில் சேவை!

1


ADDED : ஆக 06, 2025 02:54 AM

Google News

ADDED : ஆக 06, 2025 02:54 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய 4 கோவில்களை தரிசிக்கும் யாத்திரையின் பெயரே சார்தாம். ஆண்டுதோறும் இந்த யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மலைப்பகுதியில் இருக்கும் கரடுமுரடான பாதைகள், செங்குத்தான வளைவுகள் என பல்வேறு சவால்களை பக்தர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் சார்தாம் யாத்திரை என்பது அவ்வளவு எளிதானதோ, சுகமானதோ அல்ல.

துரிதகதியில் பணி


குறிப்பாக பத்ரிநாத் செல்ல விரும்பும் பக்தர்கள் ரிஷிகேஷில் இருந்து பொது போக்குவரத்தையோ அல்லது வாடகை கார், ஜீப் மூலமாகவோ மட்டுமே செல்ல முடியும். குறைந்தது, ஒன்றரை நாள் பயணம்.

பக்தர்களின் இந்த யாத்திரையை எளிதாக்க ரிஷிகேஷ் மற்றும் கர்ணபிரயாக்கில் இருந்து புதிய ரயில்வே பாதை அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அரசின் ரிஷிகேஷ் - கர்ணபிரயாக் ரயில்வே பாதை திட்டம் மூலம் உத்தராகண்டின் இமயமலையில் இருக்கும் இந்த இரு முக்கிய கோவில்களுக்கும் பக்தர்கள் இனி நிம்மதியாக சென்று வர முடியும்.

ரயில் பாதை அமைக்கும் பணி துரிதகதியில் நடந்து வருகிறது. கிட்டத்தட்ட 90 சதவீத அளவுக்கு திட்டப் பணிகள் முடிந்துள்ளன. 2027ம் ஆண்டுக்குள் ரயில் போக்குவரத்து துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிஷிகேஷ் - கர்ணபிரயாக் ரயில்வே பாதை திட்டம் குறித்து, பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடரில் மிக முக்கியமான தகவலை தெரிவித்திருக்கிறார் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.

'இந்த புதிய ரயில்வே பாதை 125 கி.மீ., தொலைவு உடையது. மொத்த துாரத்தில் 105 கி.மீ., தொலைவுக்கு குகைகள் தான். அவற்றில் 97 கி.மீ., துாரத்துக்கான பணிகள் ஏற்கனவே முடிந்துவிட்டன. மீதமுள்ள பணிகளும் முன்கூட்டியே முடியும் தருவாயில் இருக்கின்றன' என, தெரிவித்தார்.

பயண நேரம் குறையும்


ரயில் சேவை துவங்கப்பட்டால், ரிஷிகேஷ் - பத்ரிநாத் பயண நேரம், ஒன்றரை நாளில் இருந்து, 8 மணி நேரமாக குறையும். ரிஷிகேஷில் இருந்து கர்ணபிரயாக் வரை 2 மணி நேரத்தில் சென்றுவிடலாம். பின்னர் அங்கிருந்து சாலை வழியாக 6 மணி நேரம் பயணித்தால் பத்ரிநாத்தை அடைந்துவிடலாம்.

அதே போல் கேதார்நாத் பக்தர்களும் ருத்ரபிரயாக் அருகே இருக்கும் சுமர்பூர் வரை, ஒன்றரை மணி நேர ரயில் பயணத்தில் சென்றுவிடலாம். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக கேதார்நாத் மலை ஏற்றம் துவங்கும் அடிவாரமான கவுரிகுந்துக்கு 4 மணி நேரத்தில் சென்றுவிடலாம்.

ரிஷிகேஷ் - கர்ணபிரயாக் திட்டம், 16 பிரதான குகைகளுடன், 105 கி.மீ., துாரத்திற்கு உருவாகி வருகிறது. இதில் 98 கி.மீ., துாரத்திற்கு 12 'எஸ்கேப்' குகைகளும் அடங்கும். இதுவரை, 13 பிரதான குகைகளும், 9 'எஸ்கேப்' குகைகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

-நமது சிறப்பு நிருபர்-






      Dinamalar
      Follow us