பெங்களூரில் போக்குவரத்து நெரிசலில் ரயில் சிக்கியதா?
பெங்களூரில் போக்குவரத்து நெரிசலில் ரயில் சிக்கியதா?
ADDED : செப் 27, 2024 08:09 AM
பெங்களூரு: பெங்களூரில் போக்குவரத்து நெரிசலில் ரயில் சிக்கிய, வீடியோ வெளியானது. ஆனால் இதை ரயில்வே மறுத்து உள்ளது.
பெங்களூரு போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரம் ஆகும். நகரில் எந்த சாலையில் பார்த்தாலும், வாகனங்கள் நீண்ட துாரம் அணிவகுத்து நிற்கும்.
ஐந்து நிமிடத்தில் செல்ல கூடிய இடங்களுக்கு கூட, அரை மணி நேரத்திற்கு மேல் ஆகும். போக்குவரத்து நெரிசலில் சிக்கி, வாகன ஓட்டிகள் நொந்து போவர்.
இந்நிலையில் சுதிர் சக்கரவர்த்தி என்பவர் 'எக்ஸ்' வலைதள பக்கத்தில், நான், நீங்கள் மட்டும் அல்ல.
பெங்களூரு போக்குவரத்து நெரிசலில் இருந்து, ரயில் கூட தப்ப முடியாது என்று பதிவிட்டு, தண்டவாளத்தில் ஒரு ரயில் நிற்பது போலவும், தண்டவாளத்தை கடந்து நீண்ட துாரத்திற்கு வாகனங்கள் வரிசையாக நிற்பது போன்று, ஒரு வீடியோவை பதிவிட்டார்.
போக்குவரத்து நெரிசலால் ரயில் நிறுத்தப்பட்டது என்று, நெட்டின்சன்கள் கிண்டல் செய்தனர்.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே அளித்து உள்ள விளக்கத்தில், 'வீடியோவில் ரயில் நிற்கும் இடம், மாரத்தஹள்ளி அருகே முனேனகொலலு. போக்குவரத்து நெரிசலால் ரயில் நிறுத்தப்பட்டதாக கூறப்படுவது தவறான செய்தி.
'ரயில்வே கேட்டில் இருந்து சில அடி துாரத்தில், இன்ஜின் டிரைவர் ரயிலை நிறுத்தி சோதனை செய்தார். வாகன ஓட்டிகளுக்கு இடைஞ்சல் ஏற்படாமல் இருக்க, கேட் திறந்து விடப்பட்டு இருந்தது' என கூறப்பட்டு உள்ளது.