தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ரயில் டிக்கெட் முன்பதிவு; புதிய விதிமுறைகள் அமல்: உங்க கருத்துக்களை கமென்ட் செய்யுங்கள் வாசகர்களே!

ரயில் டிக்கெட் முன்பதிவு; புதிய விதிமுறைகள் அமல்: உங்க கருத்துக்களை கமென்ட் செய்யுங்கள் வாசகர்களே!

ரயில் டிக்கெட் முன்பதிவு; புதிய விதிமுறைகள் அமல்: உங்க கருத்துக்களை கமென்ட் செய்யுங்கள் வாசகர்களே!


ADDED : மே 01, 2025 08:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 01, 2025 08:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில், இந்திய ரயில்வே கொண்டு வந்த சில முக்கிய மாற்றங்கள் இன்று (மே 01) முதல் அமலுக்கு வந்தது. உங்களுடைய கருத்துக்களை கமென்ட் செய்யுங்கள் வாசகர்களே!

நீண்ட துார பயணம் மேற்கொள்ளும், பயணியரின் முதல் சாய்சாக இருப்பது ரயில் தான். முன்பதிவு செய்த பெட்டியில் பயணம் செய்யும் பயணியருக்காக, தனி இருக்கை ஒதுக்கிக் கொடுக்கப்படும். படுக்கைகளில் அமர்ந்தும், துாங்கிக் கொண்டும் நிம்மதியாக செல்லலாம்.

கோடை விடுமுறையில் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்வார்கள் என்பதால், டிக்கெட் முன்பதிவு விதிகளில் முக்கிய மூன்று மாற்றங்களை இந்திய ரயில்வே செய்துள்ளது.

* பயணிகள் வசதிக்காக அனைத்து ரயில்களுக்கும் முன்பதிவு காலத்தை ஒரே நேரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக, வெவ்வேறு ரயில்களில் வெவ்வேறு முன்பதிவு காலங்கள் இருந்தன.

* எக்ஸ்பிரஸ் அல்லது சூப்பர்பாஸ்ட் என எந்த ரயிலாக இருந்தாலும், அனைத்து ரயில்களுக்கும் சரியாக 90 நாட்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும்.

* தட்கல் மூலம் கடைசி நேரத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதில் நேரங்கள் மாற்றப்பட்டு உள்ளது. ஏசி வகுப்புகளுக்கான தட்கல் முன்பதிவுகள் காலை 10 மணிக்கும், ஸ்லீப்பர் வகுப்பு தட்கல் டிக்கெட்டுகளை காலை 11 மணி முதல் முன்பதிவு செய்யலாம்.

* ஒரு பயனர் ஐடி ஒரு நாளைக்கு 2 தட்கல் டிக்கெட்டுகளை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.

* காத்திருப்புப் பட்டியலில் உள்ள டிக்கெட்டுகளுக்கு, முழு பணத்தைத் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

* புறப்படுவதற்கு 48 மணிநேரத்திற்கும் முன்பாக டிக்கெட்டை ரத்து செய்தால், 75 சதவீத பணம் திரும்பக் கிடைக்கும். புறப்படுவதற்கு 24 முதல் 48 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால், உங்களுக்கு 50 சதவீத பணம் திரும்ப கிடைத்துவிடும்.

* 24 மணிநேரத்திற்குள் ரத்து செய்தால், எந்தத் தொகையும் திரும்பக் கிடைக்காது. இந்த முக்கிய மாற்றங்கள் இன்று (மே 01) முதல் அமலுக்கு வந்தது. இன்று முதல் அமலுக்கு வந்துள்ள புதிய நடைமுறைகள் குறித்து உங்கள் கருத்து என்ன என்பதை கமென்ட் செய்யுங்கள் வாசகர்களே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us