sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காபி தொழில் முனைவோராக 1 லட்சம் பெண்களுக்கு பயிற்சி

/

காபி தொழில் முனைவோராக 1 லட்சம் பெண்களுக்கு பயிற்சி

காபி தொழில் முனைவோராக 1 லட்சம் பெண்களுக்கு பயிற்சி

காபி தொழில் முனைவோராக 1 லட்சம் பெண்களுக்கு பயிற்சி


ADDED : பிப் 17, 2024 04:49 AM

Google News

ADDED : பிப் 17, 2024 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளைஞர் நலன் துறை


l யுவநிதி திட்டத்தின் கீழ் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3,000 ரூபாய், டிப்ளமோ பட்டதாரிகளுக்கு மாதம் 1,500 ரூபாய் வழங்கும் திட்டம், கடந்த ஜனவரி 12ம் தேதி துவங்கப்பட்டது. இந்த திட்டத்திற்காக இதுவரை 24 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது

l வேலை தேடும் இளம் தலைமுறையினருக்காக, 'யுவ சம்ருத்தி உத்யோக மேளா' என்ற பெயரில், மாநிலத்தின் பிரமாண்ட வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்

l பல்லாரி சண்டூரில் 300 கோடி ரூபாய் செலவில், திறன் வளர்ச்சி அகாடமி கட்டப்படும்

l கலபுரகி, கொப்பால் தலகல், மைசூரு வருணாவில், விஸ்வேஸ்வரய்யா பல்கலைக்கழகம், கர்நாடகா அரசு இணைந்து 350 கோடி ரூபாய் செலவில், அரசு கருவி அறை மற்றும் அறிவியல் மையம் கட்டப்படும்

l 'நபார்ட்' திட்டத்தின் கீழ், 150 கோடி ரூபாய் செலவில், பல்லாரி, சித்ரதுர்கா, ரோனில் அரசு கருவி அறை மற்றும் அறிவியல் மையம் கட்டப்படும்

l கர்நாடகா ஜெர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் சார்பில், கலபுரகியில் 16 கோடி ரூபாய் செலவில், கணினி எண்ணியல் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படும்

l சமூகத்திலும், பொருளாதாரத்திலும் பெண்கள் உயர்ந்து இருக்க, முன்னுரிமை அளிக்கிறது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் பெண்களுக்காக 50,000 குறுந்தொழில்கள் உருவாக்கப்படும்

l மீன், தேனீக்கள் வளர்ப்பு, கோழி, ஆடு, வெள்ளாடு வளர்ப்பில் ஈடுபட்டு, அதனை சந்தைப்படுத்துவதில் ஈடுபடும், 1 லட்சம் பெண்களை ஊக்குவிக்கும் வகையில், இந்த ஆண்டு இறுதிக்குள் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்

l மாநிலத்தில் 50 இடங்களில் பெண்களே நடத்தும், காபி கடை திறக்கப்படும். இதற்காக 7.50 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்

l காபி ஆணையத்துடன் இணைந்து, 1 லட்சம் பெண்கள் காபி தொழில் முனைவோராக பயிற்சி அளிக்கப்படும்.






      Dinamalar
      Follow us