உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மார் 06, 2024 05:09 AM
அ நிறம் | அளவு
பெங்களூரு, : லோக்சபா தேர்தலுக்கு, மத்திய தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. ஓட்டு சாவடிகளை அடையாளம் காண்பது, வாக்காளர் பட்டியல் சீராய்வு உட்பட, மற்ற பணிகளை முடுக்கி விட்டுள்ளது. தேர்தல் பணிகளுக்காக, அந்தந்த மாநிலங்களில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, கர்நாடகாவில் 37 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தேர்தல் பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மார்ச் 11ல் இவர்களுக்கு பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரில், மாநில தேர்தல் அதிகாரி அலுவலகத்தில், ஆன்லைன் வழியாக அளிக்கப்படும் பயிற்சியில், கூடுதல் தலைமை செயலர் ராகேஷ்சிங், வருவாய்த் துறை முதன்மை செயலர் ராஜேந்தர குமார் கடாரியா உட்பட, 37 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
