ADDED : ஏப் 03, 2025 07:39 PM
ஜஹாங்கிர் பூரி: வழிப்பறி சம்பவம் தொடர்பாக 20 வயது திருநங்கை ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
ஆசாத் பூரைச் சேர்ந்த ஆலிவர், கடந்த மாதம் 29ம் தேதி மாலை, தன் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் முகுந்த்பூர் மேம்பாலம் அருகே இயற்கை உபாதைக்காக ஒரு கிறிஸ்துவ கல்லறை தோட்டம் அருகே நின்றார்.
அப்போது அவரிடம் இருந்த பணம் 13,500 ரூபாய் மற்றும் தோல் பையை ஒருவர் பறித்துக் கொண்டு ஓடினார். பையில் ஆலிவரின் ஆதார் அட்டை, பான் கார்டு உள்ளிட்டவை இருந்தன.
புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக முகுந்த்பூர் பகுதியை சேர்ந்த ரஷீதுல், 20, என்ற திருநங்கையை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து ஆலிவரின் ஆதார் அட்டை, பான்கார்டு மீட்கப்பட்டன. போதைப்பொருள், மதுவுக்கு அடிமையான ரஷீதுல், குறுக்குவழியில் பணம் சம்பாதிக்க வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

