காங்., - எம்.எல்.ஏ., மீது திருநங்கை பாலியல் புகார்
காங்., - எம்.எல்.ஏ., மீது திருநங்கை பாலியல் புகார்
ADDED : ஆக 23, 2025 01:23 AM

திருவனந்தபுரம்: பலாத்காரம் செய்வது போல் தன்னுடன் உறவு கொள்ள கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராகுல் மாங்கூட்டத்தில் வற்புறுத்தியதாக திருநங்கை ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கேரளாவின் பாலக்காடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராகுல் மாங்கூட்டத்தில்.
இவர், 'வாட்ஸாப்' செயலி வாயிலாக ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பியதாகவும், தனியாக ஹோட்டலுக்கு வரும்படி அழைத்ததாகவும், பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் மலையாள திரைப்பட நடிகை ரினி ஆன் ஜார்ஜ் சமீபத்தில் குற்றஞ்சாட்டினார்.
ஆனால், ராகுல் பெயரை அவர் வெளிப்படையா க கூறவில்லை. அது ராகுல் தான் என, கேரள ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதை தொடர்ந்து, மேலும் பல பெண்கள் ராகுலுக்கு எதிராக புகார் கூறினர்.
இந்த அழுத்தம் காரண மாக, கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார்.
'ஆனால், அவர் எம்.எல்.ஏ., பதவியையும் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும்' என, பா.ஜ., கம்யூ., கட்சிகள் அறிவித்து உ ள்ளன.
இந்நிலையில், ராகுல் மாங்கூட்டத்திற்கு எதிராக கொச்சியை சேர்ந்த திருநங்கையான அவந்திகா நேற்று பரபரப்பு புகார் கூறினார். இது குறித்து கொச்சியில் அவர் கூறியதாவது:
திருக் காக்கராவில் நடந்த இடைத்தேர்தலின் போது தான் ராகுலுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அதன் பின், 'வாட்ஸாப்' வாயிலாக குறுஞ்செய்திகள் அனுப்புவார். ஆரம்பத்தில் இருந்தே என்னிடம் மிகவும் ஆபாசமாகத்தான் பேசி வந்தார்.
அவர் வக்கிரமான புத்தி கொண்டவர். டில்லி அல்லது ஹைதராபாத் சென்று ஹோட்டலில் அறை எடுத்து, பலாத்காரம் செய்வது போன்று என்னுடன் உறவு கொள்ள வேண்டும் என வற்புறுத்தினார். இதை வெளியில் சொல்லக்கூடாது என்றும் மிரட்டினார்.
இவ்வாறு அவர் கூறினார்.