ADDED : ஜன 20, 2024 06:00 AM
விஜயநகரா: மைசூரின் மிருகக்காட்சி சாலையில் இருந்து, ஆண் ஒட்டக சிவிங்கி, ஹம்பியின் மிருகக்காட்சி சாலைக்கு அனுப்பப்பட்டது.
விஜயநகராவின், ஹம்பி மிருகக்காட்சி சாலையும், பிரபலமான மிருகக்காட்சி சாலைகளில் ஒன்றாகும். இங்கு பல ஆண்டுகளாக பெண் ஒட்டக சிவிங்கி தனிமையில் இருந்தது. விலங்குகள் பரிமாற்றம் திட்டத்தின் கீழ், மற்ற மிருகக்காட்சி சாலையில் இருந்து, ஆண் ஒட்டக சிவிங்கியை கொண்டு வரும்படி கோரிக்கை எழுந்தது.
கர்நாடக மிருகக்காட்சி சாலை ஆணைய உத்தரவுபடி, மைசூரின் சாமராஜேந்திரா மிருகக்காட்சி சாலையில் இருந்து, சங்கர் என்ற பெயர் கொண்ட ஒட்டக சிவிங்கி, ஹம்பி மிருகக்காட்சி சாலைக்கு நேற்று சிறப்பு வாகனத்தில் கொண்டு வரப்பட்டது. ஹம்பி மிருகக்காட்சி சாலையில் தனிமையில் இருந்த பெண் ஒட்டக சிவிங்கிக்கு ஜோடி கிடைத்துள்ளது.
மைசூரின், மிருகக்காட்சி சாலையில் இதற்கு முன்பு, ஒன்பது ஒட்டக சிவிங்கிகள் இருந்தன. தற்போது எட்டாக குறைந்துள்ளன.