sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கேரள முதல்வருக்கு ரூ.1 லட்சத்தில் கட்டிலா? திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு விளக்கம்

/

கேரள முதல்வருக்கு ரூ.1 லட்சத்தில் கட்டிலா? திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு விளக்கம்

கேரள முதல்வருக்கு ரூ.1 லட்சத்தில் கட்டிலா? திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு விளக்கம்

கேரள முதல்வருக்கு ரூ.1 லட்சத்தில் கட்டிலா? திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு விளக்கம்

1


ADDED : பிப் 14, 2026 06:20 PM

Google News

1

ADDED : பிப் 14, 2026 06:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்: உலக ஐயப்பன் சங்கமத்தில் பங்கேற்ற கேரள முதல்வருக்கு ரூ.1 லட்சத்தில் கட்டில் வாங்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு விளக்கம் அளித்துள்ளது.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சபரிமலையில் நடைபெற்ற உலக ஐயப்பன் சங்கமத்தின் தணிக்கையில், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு பல லட்சம் ரூபாய் வரையில் கணக்கில் முரண்பாடுகளைக் கொண்டுள்ளதாக கேரள உயர்நீதிமன்றம் கண்டறிந்தது. விஐபிக்களுக்கான உணவு ஏற்பாடு மற்றும் பல்வேறு பொருட்களின் பயன்பாடு குறித்து முறையான கணக்குகளை கையாளவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

இது தொடர்பாக வரும் பிப்ரவரி 27ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், உலக ஐயப்ப சங்கமத்தின் தணிக்கை தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள் அடிப்படையற்றவை மற்றும் வேதனைக்குரியவை என்று திருவிதாங்கூர் தேவஸ்வம் விளக்கமளித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்; கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் கட்டில் வாங்கப்பட்டதாகக் கூறப்படும் தகவல் முற்றிலும் தவறானது. ரூ.3 லட்சத்து 83 ஆயிரத்து 439 தொகையானது, மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் தங்கும் பம்பா விருந்தினர் மாளிகைக்கு தேவையான பொருட்களே வாங்கப்பட்டன. இந்த பொருட்கள் அனைத்தும் தேவஸ்வம் போர்டின் நிரந்தர சொத்துகளாகவே இருக்கும்.

கலாசார நிகழ்ச்சிகளில் நந்தகோவிந்தம் பஜனை குழு முதலில் பரிசீலிக்கப்பட்டது. ஆனால், இசையமைப்பாளர் இஷான் தேவ் மற்றும் 35 பேர் கொண்ட குழுவினரே நிகழ்ச்சியை நடத்தினர். அவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.8 லட்சம் தொகையானது, 5 நாள் தங்குமிடம், ஒத்திகை மற்றும் தொழில்நுட்பச் செலவுகளை உள்ளடக்கியது. அவசரமாக தயாரிக்கப்பட்டு கோப்புகளைத் தாக்கல் செய்ததால், நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனத்தால், கலை நிகழ்ச்சி நடத்திய குழுவின் பெயரில் தவறு ஏற்பட்டு விட்டது. தனலட்சுமி வங்கி மற்றும் கேரளா வங்கி வழங்கிய ரூ.3 கோடி ஸ்பான்சர்ஷிப் தொகை ஏற்கனவே பொது நிதியில் சேர்க்கப்பட்டுவிட்டது. இதன் மூலம் நிதி முறைகேடு குறித்த புகார்கள் பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது. வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் விதமாக, அனைத்து செலவுகளுக்கான இறுதி ஆய்வு பிப்ரவரி 17ம் தேதி நடக்கும் தேவஸ்வம் போர்டு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருக்கிறது, இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us