திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு உயர்த்திய பூஜை கட்டணங்கள் ரத்து
திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு உயர்த்திய பூஜை கட்டணங்கள் ரத்து
ADDED : ஆக 23, 2011 11:51 PM

சபரிமலை : சபரிமலை கோவில் உட்பட, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சமீபத்தில், திடீரென உயர்த்திய அனைத்து பூஜை கட்டண உயர்வையும் ரத்து செய்து விட்டது.
புதிய கட்டண உயர்வு குறித்து ஆராய, துணை கமிட்டி நியமிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில், சபரிமலை உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றன. இக்கோவில்களில், இதுவரை இருந்து வரும் பூஜை கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி, புதிய கட்டண உயர்வை தேவஸ்வம் போர்டு சமீபத்தில் அறிவித்தது.
தேவஸ்வம் போர்டை கண்டித்து மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும், கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில், இப்புதிய கட்டண உயர்வு குறித்து, அதற்குரிய வழிகளை ஆராயாமல் தேவஸ்வம் போர்டு அறிவித்துள்ளதாக, சிறப்பு கமிஷனர் எஸ்.எச்.பஞ்சாபகேசன் அறிக்கை, ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து, புதிய கட்டணங்கள் வாபஸ் பெறப்பட்டன. புதிய கட்டண உயர்வு குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க, துணை கமிட்டியை தேவஸ்வம் போர்டு நியமித்துள்ளது. இக்குழுவின் அறிக்கை கேரள ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும். ஐகோர்ட் பரிசீலித்து அறிவிக்கும் பட்சத்தில், புதிய கட்டண உயர்வு குறித்து அதன் பிறகு தேவஸ்வம்போர்டு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.