ADDED : ஜன 08, 2024 04:14 AM

வட கிழக்கில் உள்ள பயங்கரவாதிகளுடன், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசு பேச்சு நடத்தி வருகிறது. ஆனால், ஜம்மு - காஷ்மீரில் உள்ள பொது மக்களை, பயங்கரவாதிகளை போல் நடத்துகிறது.
மெஹபூபா முப்தி
தலைவர், மக்கள் ஜனநாயக கட்சி
-----
ஏன் மாறுபட்ட நிலைப்பாடு?
ம.பி., - உ.பி., - கர்நாடகாவில் உள்ள காங்., நிர்வாகிகள், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை கொண்டாட தயாராகி வரும் நிலையில், கேரளாவில் உள்ள காங்கிரசார் மட்டும், ஏன் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்? ஹிந்துக்களின் உணர்வை அவர்கள் புறக்கணிக்கின்றனரா?
கே.சுரேந்திரன்
பா.ஜ., தலைவர், கேரளா
----
எதிர்மறையான கருத்து இல்லை!
ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்து, முஸ்லிம்களிடம் இருந்து எந்த எதிர்மறையான கருத்தும் வரவில்லை. ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்கிரஸ் போன்ற, 'இண்டியா' கூட்டணியில் உள்ள கட்சிகள் தான், வேண்டுமென்றே சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.
சையத் ஷாநவாஸ் உசேன்
முன்னாள் மத்திய அமைச்சர், பா.ஜ.,