ADDED : ஆக 03, 2024 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக மருத்துவ குழு வயநாட்டில் சிகிச்சை
தமிழகத்தில் இருந்து, 10 டாக்டர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர், வயநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அக்குழுவினர் இதுவரை, 1,000க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை அளித்துள்ளனர்.
இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழக மருத்துவக் குழுவினர், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு, ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, ரத்த ஆக்சிஜன் அளவு, நாடித்துடிப்பு, எடை ஆகிய பரிசோதனைகள் செய்து, தேவையான மருந்துகளை வழங்கி வருகின்றனர்.
மேலும், 500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு, 'சானிட்டரி நாப்கின்' வினியோகித்துள்ளனர். வயநாட்டிற்கு தேவையான மருந்து, மாத்திரைகள் மற்றும் மருத்துவக் குழுவினர் அனுப்பி வைக்கப்படுவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.