பார்லி.யில் அத்துமீறிய வழக்கு : பயங்கரவாத தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் விசாரிக்க ஒப்புதல்
பார்லி.யில் அத்துமீறிய வழக்கு : பயங்கரவாத தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் விசாரிக்க ஒப்புதல்
ADDED : ஜூன் 06, 2024 07:57 PM

புதுடில்லி: பார்லிமென்டில் அத்துமீறி வண்ண புகை பரவ செய்த வழக்கினை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணை நடத்த டில்லி துணை நிலை கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்தாண்டு டிச.13-ம் தேதி பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த போது, லோக்சபாவிலும், பார்லிமென்ட் வளாக வாயிலிலும், சிலர் அத்துமீறி நுழைந்தனர். இதையடுத்து அங்கிருந்த எம்.பி.க்கள் அலறியடித்து வெளியேறினர். பின்னர் குழல் வாயிலாக வண்ணப் புகையை பரவச் செய்தது பரபரப்பை ஏற்படுத்தினர்.
இது தொடர்பாக மனோரஞ்சன், டி, சாகர் சர்மா, அமோல் தன்ராஜ் ஷிண்டே, நீலம் ரனோலியா, லலித் ஜஹா, மகேஷ் குமவாத் என 6 பேரை டில்லி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கை பயங்கரவாத தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த டில்லி துணை நிலை கவர்னர் சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார்.