பழங்குடியினர் வளர்ச்சி பயணம்: அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்
பழங்குடியினர் வளர்ச்சி பயணம்: அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்
ADDED : அக் 19, 2024 01:08 AM

புதுடில்லி: 'விளிம்புகளில் இருந்து மையம் வரையிலான அமைதியான உரையாடல்' என்ற தலைப்பில் பழங்குடியின சமூகத்தினரின் கலைக் கண்காட்சி, டில்லியில் நேற்று முன்தினம் துவங்கியது.
இதை துவக்கி வைத்து பார்வையிட்ட வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:
நம் நாட்டில் உள்ள பழங்குடியின சமூகத்தினர் மகத்தான பெருமைக்கு தகுதியானவர்கள். பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதன் வாயிலாக பழங்குடியின சமூகத்தினரின் வளர்ச்சிக்கு மத்திய அரசு பெரும் பங்காற்றி வருகிறது.
இயற்கையோடு மக்கள் இணக்கமாக வாழ முடியும் என்பதை பழங்குடியினரின் இந்த கண்காட்சி எடுத்துரைக்கிறது.
பல்லாயிரம் ஆண்டுகளாக பழங்குடி சமூகம் இயற்கையுடன் நீடித்த பந்தத்தை உருவாக்கியுள்ளதை இந்த கலை படைப்பு காட்சிபடுத்துகிறது.
'அனைவருக்குமான வளர்ச்சி' என்ற நோக்கில் செயல்படும் மத்திய அரசு, குறிப்பாக பழங்குடியின சமூக மக்களை உயர்த்துவதில் உரிய கவனம் செலுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.