அரக்கர்களின் கொடுஞ்செயலால் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி!
அரக்கர்களின் கொடுஞ்செயலால் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி!
UPDATED : ஏப் 24, 2025 07:29 PM
ADDED : ஏப் 24, 2025 06:51 AM

ஸ்ரீநகர்: காஷ்மீர், பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணியர் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை கண்டித்து, நாடு முழுவதும் மக்கள் கண்டன பேரணி நடத்தினர். கோல்கட்டாவில் கருப்பு தினம் என குறிக்கும் போஸ்டர்.
பயங்கரவாத தாக்குதல், தொடர்பான புகைப்படங்கள் பின்வருமாறு:
மும்பையில் ஓவியம் வரைந்து எதிர்ப்பு தெரிவித்த குருகுல மாணவர்கள்.
காஷ்மீரில் உற்றாரை இழந்த மக்களுக்கு ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா.
உற்றாரை இழந்து கதறும் பெண்கள்.
காஷ்மீரில் பலியானவர்களுக்கு கர்நாடகாவில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய பெண்கள்.
டில்லி பாக்., தூதரகத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
பந்த் காரணமாக, வெறிச்சேடிய ஜம்மு ரகுநாத் பஜார் பகுதி.
ஸ்ரீநகரில் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள்.
தாக்குதல் நடந்த பைசரன் பள்ளத்தாக்குப் பகுதிக்கு நேற்று சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அங்குள்ள நிலைமை குறித்து பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். இடம்: பஹல்காம், ஜம்மு காஷ்மீர்.
தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள்.