தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/அடுத்த 100 ஆண்டுக்கு திரிணமுல் தலைதூக்க முடியாது: மே.வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி ஆவேசம்

அடுத்த 100 ஆண்டுக்கு திரிணமுல் தலைதூக்க முடியாது: மே.வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி ஆவேசம்

அடுத்த 100 ஆண்டுக்கு திரிணமுல் தலைதூக்க முடியாது: மே.வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி ஆவேசம்

5


ADDED : நவ 11, 2026 07:07 AM

Follow on GoogleFavourite on Google

5

ADDED : நவ 11, 2026 07:07 AM


5
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

​கொல்கத்தா: மேற்கு வங்கத்தில், ஊழல் திரிணமுல் காங்கிரஸ் வேரோடு பிடுங்கி எறியப்பட்டு விட்டது. அடுத்த 100 ஆண்டுகளுக்கு அந்த கட்சியால் மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியாது என, முதல்வர் சுவேந்து அதிகாரி சாடியுள்ளார்.

​2007ம் ஆண்டு நடைபெற்ற நந்திகிராம் நிலக்கையக எதிர்ப்பு போராட்டத்தின் 19வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் நந்திகிராமில் நடந்த பொதுக்கூட்டத்தில் சுவேந்து அதிகாரி பங்கேற்று பேசியதாவது:

​சென்ற ஆண்டு இதே மேடையில் பேசும்போது, 2026ல் நான் இங்கு வரும்போது ஊழல் மலிந்த திரிணமுல் கட்சியின் பெயரும், சின்னமும் அதிகாரத்தில் இருக்காது என உறுதிபடக் கூறினேன். நான் சொன்னது பலித்துவிட்டது. ​இப்போது அடித்துச் சொல்கிறேன். திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் சின்னமான இரட்டைப் பூவும், புல்வெளியும் சுவடு தெரியாமல் அடியோடு வேரறுக்கப்பட்டு விட்டன. அடுத்த 100 ஆண்டுகள் ஆனாலும், அந்தக் கட்சி இனி ஆட்சியை பிடிக்க முடியாது. தலைதூக்க வழியில்லை. ​இவ்வாறு அவர் கூறினார்.

பதிலடி:


சுவேந்து அதிகாரியின் இந்த கருத்து குறித்து, மம்தா பானர்ஜி தரப்பு திரிணமுல் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் கூறுகையில், எங்கள் கட்சியின் பெயரையும் சின்னத்தையும் சதித்திட்டம் தீட்டி பறிக்க பார்க்கின்றனர். கட்சியில் சுவேந்து போன்ற பிளவை ஏற்படுத்தும் நபர்களுக்கு எப்படி இடம் கொடுத்தோம் என்பதை நாங்கள் சுயபரிசோதனை செய்ய வேண்டும்' என அவர் கூறியுள்ளார்.

காங்., காட்டம்:


​காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது: மக்களின் தீர்ப்பு என்பது எந்தக் கட்சிக்கும் நிரந்தர வைப்பு நிதி கிடையாது. ஆளுங்கட்சியினர் ஆணவத்துடன் பேசக்கூடாது. அதிகார மமதையை வங்காள மக்கள் ஒருபோதும் மன்னித்ததில்லை' எனக் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us