திரிணமுல் எம்பி மொய்த்ரா மீது முட்டை வீசி தாக்குதல்
திரிணமுல் எம்பி மொய்த்ரா மீது முட்டை வீசி தாக்குதல்
ADDED : ஜூலை 01, 2026 06:19 PM

கொல்கட்டா: கிருஷ்ணநகர் லோக்சபா தொகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் இருந்தபோது, வெளியே கூடியிருந்த கும்பல் தன் மீது முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக திரிணமுல் காங்கிரஸ் பெண் எம்.பி. மஹுவா மொய்த்ரா குற்றம் சாட்டினார்.
மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது நதியா மாவட்டம் கலிகஞ்ச் பகுதியில் வைத்து முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. கட்சிப் கூட்டம் ஒன்றில் பங்கேற்கச் சென்றபோது, ஒரு உணவகத்தில் அங்கு திரண்டிருந்தவர்கள் அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி முட்டைகளை வீசினர்.
இது தொடர்பாக வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, அவர் இந்தச் செயலுக்காக பாஜவை கடுமையாகச் சாடினார். இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் பாஜ தொண்டர்கள் இருப்பதாக மொய்த்ரா குற்றம் சாட்டியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வரும் நிலையில், இந்தச் சம்பவத்தை பாஜ ஆதரவாளர்கள் செய்ததாக திரிணமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
